Saturday, 2 February 2013

இறைவா! நீ இருந்தால் மானுடம் ஓர்இனம் என்றாக உதவு!

All Job Advices Sites   
   




 

 

 

   Photo:  Shahul Hameed

 

         
 
 
 
 
 
 
 முன்னோட்டம் காண்பி:   
 
    
 இறைவா! நீ  இருந்தால் மானுடம்  ஓர்இனம் என்றாக உதவு!                       
 
 
பெருவெடி நிகழும்முன்; பேரண்டம் விரியும்முன்;
பெருவானம் திறக்கும்முன்; பேரழிவு நிகழும்முன்;
கருமையப் பெரும்துளை கருஆகும்முன்; கதிரவன் குடும்ப
கிரகங்கள் கிளைத்து வட்டமிட்டுச் சுழலும்முன்; யாவும்குளிர்ந்து

இறுகும்முன்;  பூமிமேல் இங்கும்அங்கும் நீர்நிலை, கடல் தோன்றப்
பெருங்காடுகள் வளர்ந்துப் பரவும்முன்; பெரும்டைனோசர் அன்னபல
மிருகங்கள் நெருப்புமூச்சு விட்டு பசிகொண்டு அலையும்முன்; மானுட
வரலாறு மகிழ்ந்து நிலைக்குமுன்; இறைவா! இதுவரை அடுக்கிட்ட,

சரித்திர இயற்கை சாகசங்களை நீயேபடைத்ததாய் எவனோ,
ஒருபொய்யை விண்அளவு உன்உடன் தோன்றிநேரில் கண்டாற்போல்;
தரித்திர போர்ஆன கதைகளை;   இதிகாச கால நிகழ்வென எழுதிட,
உருஉனக்கும் கொடுத்தும்,  பெயரிட்டும்;  உலகுள்  மானுட  மாஇனத்தைப்
 
பிரித்தும்;  பேதமதத் தீமைகளால் ஒற்றுமையைச் சிதைத்தும்; கெடுப்போரை
இறைவா!நீ  இருந்தால் உலகில்உடன் தோன்றி திருத்து;  நிரந்தரமாய்,
மரணம் பயம்தரித்திரம் பிணியற்ற வாழ்வை அனைவர்கும் வழங்கு!
கருஆகி பெற்றஉன் தாய்!யார்?  கனவில்அல்ல;  நேரில்தோன்றி  நிரூபி!
அருளாய்உன் அன்னையைத் துதித்து மானுடம்;  ஓர்இனம் என்றாக உதவு!
 
 
முன்னோட்டம் -
தொடர்சியைக் காண்பி:       தெய்வமே! உனக்குஉன் அம்மாவைத் தெரியுமா?
அடுத்தது காண்பி:                   கடவுளை வணங்கும்நீ நல்லவனாக ஆக வேண்டுமே!
மேலும் காண்பி:                   காதலால் இசைந்ததும் /  !

  அந்நாளில் ஓர்கொடி!


                                                                                                                                                                                                                 
                                                                                                                                                                    
 
 
 
 
 



நாட்டு ஒற்றுமைக்கு
அறிக்கை/கவிதைகள்
தீண்டு:
அறிவியல் சார்ந்த கவிதைகள்:
அழாச்சுளை உண்ணும் அறிவே!

 
 
  

No comments:

Post a Comment