Wednesday, 3 September 2014

இராதோனு(க்)  குவிழா... எதற்கு?

https://plus.google.com/u/0/app/basic/photos/104293557269756681667/album/6052813017555952337/6052813022159860450?cfem=1


ஓர்இடம்  என்றுஅன்றி ஒவ்வோர்
துரும்பிலும்,
பாரெங்கும் உள்ளான்;
பரவிஎன்றாய் - யாரும்,
இராநிலைஓர் ஏழை...
இரந்துண்ண நாளும்;
இராதவன்மேல், பற்று எதற்கு?

உயரும் விலைஊ  டுறுவ வயிற்றை;
கயிறைக் கலுத்திலிட்டு, காண்க!
உயிரை;
இராததால் சோறு இறந்துபட ஏழை;
இராதோனைப் போற்றல் எதற்கு?

சாலைப் பழுதொடு சாக்கடை,
வாடையும்;
மாலைக்  கொசுக்களும்,
மண்டிடும்  வேளை...
இராநிலை  எற்ப்படுத்து; ஏழைத் துயர்தீர்!
இராதவன்மேல் ஆர்ப்பாட்டம் எதற்கு?

அருந்தும்பால் கெட்டால், அருந்தற்க; என்று...
விரைந்துஉடன் கொட்டிடுவாய், வீதியில்எந் நோயும்...
மருந்தில் அகன்றும் மரணம் நிகழும்;
இராதனுக்குக் கோயில் எதற்கு?

தெருத்தெருவாய் தேவையோ... கோயில்?
நெருப்புள் உழைப்போன் நிதமும், இரவில்...
தெருவில் உறங்கத் திணறி,
கொசுவால்...
இறக்கின்றான்! சொல்இறைவன்...
எங்கே?

ஆடைகொடு, சோறுகொடு; அப்புறமாய் கல்விகொடு;
வீடுகொடு, வேலைகொடு;
வேற்றுமைத்தீ வாடை...
இராத படிஒன்றி, இந்தியாவை நேசி;
இராதோனு(க்)  குவிழா  எதற்கு?


Read more [Click > URL]:
https://plus.google.com/u/0/app/basic/stream/z13rvftgsnmfsxddf22rwl1iaurdy5g4u04?cbp=146iduzj2t6rj&sview=1&cid=5&soc-app=115&soc-platform=1&spath=%2Fu%2F0%2Fapp%2Fbasic%2Fs%2F%2523Ganesha%2Frelated&sparm=cbp%3Dy6n1cwoh9p5u%26sview%3D28%26cid%3D5%26soc-app%3D115%26soc-platform%3D1%26sro%3D%2523GaneshChaturthi%26sri%3D1

http://willsinunityworld.blogspot.in/2014/05/oh-this-soil-sons-and-daughters.html?m=1

No comments:

Post a Comment