Photos: dinesh khans
நதிநீர் கலப்பு ஆகி கடல்நீராக மாறி,
கடல்நீர் ஆவிஆகி கார்முகில் என்றாகி,
புவிமீது மழைநீர் ஆகமாறி - மீண்டும்
பொழிகின்ற இயற்கையை ஆய்வுச் செய்க!
இப்படி நேற்றும் நடந்திட்டது கலப்பு;
அப்படி இன்றும் நடக்கின்றது கலப்பு;
நாளையும் தொடரும் இந்த நடப்பு;
இதில் சாதி ஓதுவது என்ன நேர்மை? [இப்படி]
பழுப்பன் குடும்பத் துள்ளும் கருப்பு;
சிவப்பி வீட்டுனுள்ளும் கருப்பு - அப்படி
கற்பு மறைவுகளில் கலந்த செய்திகளின்
உண்மை மட்டும் ஓது; மகிழ மலருமே அன்பு!
No comments:
Post a Comment