Photos: Anbu shivakumar
தென்றல் தழுவக்கொடி நாணி - சிறு
தேரெனவே அசையுதடி!
குன்று கொடிமலர்ஒன்றுச் சிவந்து - மது
சிந்தியிதழ் விரியுதடி!
கண்டு கனியுருண்டு புரண்டு - காற்றில்
காண்[க] என்று ஆடுதடி!
உண்டு மகிழவந்த வண்டு - எதை
தின்பதென்று தினருதடி!
சங்கு நிறத்தில்விண் மேகம் - பாவம்
சங்கடத்தில் அலையுதடி!
எங்கு தூரல்போட என்று,
இடம் பூமியிலே தேடுதடி!
இங்கு பொழிகமழை என்று - பூமி
சோகமாகி வெடித்ததடி!
பொங்கு கடலெனவே எழுந்து - காற்று
பூனைப் போன்று புகுந்ததடி!
குளுக்கு குளம்ஒன்று நோக்கி - நதி
கிளுக்எனவே சிரிக்குதடி!-கிளு
கிளுக்கும் அலைஓசை கேட்டு - ஒரு
மீன் எம்பிக் குதிக்குதடி!
கொக்கு ஏரிநீரைக் கண்டு - காதல்
குமரியென கோணுதடி!
வழுக்குப் பாறைஒன்று வனச்சரிவில் - சோலை
அழகு மகரந்தம்தூவி மகிழுதடி!
-- Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
No comments:
Post a Comment