Photos: Shaik Bilal
அவன்: நெழியரவின் விரிப்படமே!
விழியிமையின் மொழிவளமே!
பிழிகனிகள் விளைவனமே!
எழில்தளத்தின் புகழ்சுழியே!
ஊணும் நீதானே உயிரும் நீதானே!
நானும் தமிழ்தேனே! நானே நீதானே!
தானந் தனம் தானா தானந் தருவாயே!
தானந் தரத் தானே நீயும் கனிந்தாயே!
அவள்:
தானந் தனம் தானா தானந் தருவேனா?
தானந் தரத் தானா நானும் மலர்ந்தேனா?
கானகத் தேனே!சுகம் காண உதிர்ப்பாயே!
வான முகிழ்ஊணாய் மாறிப் பொழிவாயே!
தானந் தரத்தானே நானும் செழித்தேனே!
தானந் தனம் தான்னா தேனும் சொரிவேனே!
-- Wills in Kavithai Chittu
http://willsindiaswillswords.blogspot.in
No comments:
Post a Comment