Tuesday 21 May 2013

வேற்றுமையை, ஒற்றுமையில் நின்று ஒழி!


Kavita Hindustani's profile photo Photos: Kavita Hindustani


பாவவிதி புண்ணியம்; பல்லிகிளி சோதிடம்!
காவுதரு பூசை; கடவுள் மதலீலை!
தேவர்ருல கம்நரகம் செய்வினை சொர்கமிவை,
யாவும் அறிவிலாதார் நோய்!


பலாவைப் பிளந்து பகைசூழ்
விலக்கி,
அழாச் சுளையுண்ணும் அறிவே! நிலாவென,
பேதம்பிள, சாதிவிழ, பேதமை போக்குசம,
நீதிகாண் நேர்மை அது!


இறைச்சி உண்ணும் மானுடரை இகழ்ந்தி கழ்ந்து சாடுறீர்
இறைச்சி யால்உடம் பிருக்க இகழ்ந்து பேசல் ஆகுமோ?
இறைச்சி யோடு இறைச்சி சேர இறைச்சி யான; மூடரே!
இறைச்சி நீக்கி நரம்பெ ழும்பில் இயங்க உம்மால் இயலுமோ?


தீட்டுத் தீட்டுத் தீட்டென்றே தினம்பு லம்பும் மூடரே!
தீட்டுப் பெண்ணை தொட்டிணைய, தீட்டுப் போவ தெவ்விடம்!
ஆற்றில் காக்கை போலமூழ்கி ஆபாச பேதம் ஓதுறீர்!
போற்றும்உம் அநாகரிக போதனை நீருள்மூழ்க மறையுமோ?
ஆற்றில்மீன் நாற்றம் இருக்க ஆற்று நீர்தீட் டில்லையோ?



கல்லே!கல்...கற்றவற்றை, கற்பி புரட்சிசெய்;
உள்ளத்தால் இந்தியராய் ஒன்று!


வேற்றுமையில் ஒற்றுமையோ? வேண்டாமே! வேற்றுமையை,
ஒற்றுமையில் நின்றே ஒழி!



--  Willswords Tamil Twinkles
    
http://willsindiastamil.blogspot.com

No comments:

Post a Comment