படவரிசை பாடல்/கவிதைகள்!படவரிசை 27/07/2012
Photos: எழிழன்
கண்ணா! 'பண்'ணா', என்றே
காட்சி தரும் பெண்ணே... !
உன் - பேரெழில்தான்,
பின்னா முன்னா...!
சொல்... நீயே!
அவள்: பொ(ஓ...) டா!
அவன்:
'ஆ' விடியும் அழகை ரசியும் என்று...
ஆவடி யில்ஒரு பூஅசைய,
பூமடி யில்வந்துப் புகும்அரி யின்எழில்,
காலடியில், இதழில்... மகரந்தமோ படிய...
[ஆவடி - சென்னையின் ஒரு புறநகர்ப் பகுதி]
அவள்:
சிந்தா திரிப் பேட்டையில் ஓர் செடியைத் தொட்டு,
சிந்தா(து) அரி மகரந்தத்தை உதிர்த்து விட்டு,
சிந்தா(து) அரி மலர்மதுவை அருந்திவிட்டு,
*சிந்தா திரி வேளையிலும் சிதறக் கண்டேனே!
பாடல் விளக்கம்:
சிந்தாதிரிப் பேட்டையிலே
(சென்னையில் ஓர் நகர்புறப் பகுதியின் பெயர்)
செடியத் தொட்டு
சிந்தாது (கீழே விழாது, விரயமாகாது)
அரி (வண்டு)
மகரந்தத்தை உதிர்த்துவிட்டு
சிந்தாது (வீணாக்காது)
அரி (அழகிய)
மலர் மதுவை அருந்தி விட்டு (விலகி)
*சிந்தா (தமிழ் கவிதைகளில்
சிந்து எனப்படும் இசைப்படிவம்)
(மூன்று) வேளைகளிலும் எ
சிதற (பாடக்)க்கண்டேனே!
Click also:
ப்பம்
No comments:
Post a Comment