Sunday, 27 July 2014

தமிழ்அழகே! சிலையே!

View photo [Click > URL]:
https://plus.google.com/app/basic/stream/

ஆவலோடு, உன்னை இங்கே,
ஓர் ஆலயமாய்...
தோன்றக் கண்டு;

காவலுள் இல்லாமல் காட்சிதந்து;

என்னை நோக்கி...

பூவென நாணிமணந்து புன்னகை

புரிந்திடும் அன்பால்...

தேவதைநீயே! என்றும்என்றன்...

தேவி அம்மனே! 

தாக்கும் விழிகணையே! 

தங்கமே! என் தமிழ்அழகே!
பூக்கும்பூ புன்னகையே! 
பூவாய்அசை விண்மின்னலே!

ஆடும் நைல்நதியே!

ஆடாஆழ்கடலே!
ஓடும் வெண்ணிலவே!
ஓடா ஒளி வெள்ளமே! 

ஊடும்எம்  காவிரியே!

ஊடாபல் லவன் சிலையே!
போடும் அகில் புகையே!
பொன்வைரம் புதுப்பொலிவே!

ஆசு கவிதைச் சுவையே!

அழகுப்புவன வனமே!
பேசுஉன் விழி வழியே! [மறுமொழி]
பேசாது வழிமொழிவேன்!

No comments:

Post a Comment