Sunday, 27 July 2014

தனியே நான்! ஏதோ  ஓர் தீவில்...

https://plus.google.com/u/0/app/basic/stream/


மலைகள் பனியை எறிந்திட்டன!
எவரெஸ்ட் எங்கே என்றன!

வானம் முகிலை அகற்றிட்டது!

நிலவைக் காட்டி சிரித்திட்டது!

சமவெளி விண்ணைப் பார்த்திட்டது!

மழையை அங்கே பொழி என்றது!

சில் என்ற குளிர்ச்சிக்கு தென்றல், புல்வெளியை நாடிட்டது!


புயல், கடலின் ஆழம் கணக்கிட,

அலைகளைத் துளைத்து...
உட்புகுந்தது!

கடல் மீன்களோ கரைசேர விடாமல்,

இடையிடை என்னைக் கடித்திட்டன!

செல்வத்தின் செல்லப் 

பெண்தான் நான்! T.tsunami...

கடல் அலைகளோ, புயலோ...

ஏதோ  ஓர் தீவில் இங்கே போட,

பூமிக் கோளம் தனியே என்னை,

கூட்டிக்கொண்டு ஓடுகின்றது...
பூமியோடுநானும் சுழல்கின்றேன்!

No comments:

Post a Comment