[Link address:
https://plus.google.com/u/0/103350619561985174722]
எத்தனை ஆண்டுகள் கடந்திட்டன! - உன்னை
என்றன் இளமைத் தழுவாமல் ஓய்ந்திட்டது!
பித்தன் கதையில்வரும் சிவகாமிபோல்
பெரும்பிழை நான்என்ன செய்தேனோ? - உன்றன்
சக்தி அனைத்தும விரயம் ஆயிற்று! - நம்காதல்
சரித்திரத்தில் என்இளமை [உனக்கு]
பயன்படமால் போயிற்று!
காதலைப் பதுக்கினாய் - அது
கவிதையாய்ப் பிதுங்கிற்று! - உனக்காக
நாணத்தை ஒதுக்கினேன்! இப்போது
ஆசையுள் ஆசை சூடேறிற்று!
தீயோ உன்றன் நினைவு நாள்தோரும் என்றன்
தேகம் தகிக்கின்றது! - நின்றன்
தாபத்தால் தழுவி அணைத்திட்டால்! [அப்போது]
இருவர் காதலும் குளிர்ந்திடுமே!
No comments:
Post a Comment