Monday, 22 December 2014

அன்புக்கு ஓநாய்! வம்புக்கு, தெரு நாய்... மதம்!




  Photo :  shreya bhatt


[அவனவன் சாதியை அவனவன் ஆளுகையில்...
அவசியம் இடஒதுக்கீடு,  மதம்மாறும் தேவை இராது!
தவறும் நேராது; சண்டைகளும் மறையும் - கூகுள்,
இணைய வலைத்தளம் திறப்பீர் விவேக வழிமுறை;
"வில்ஸ்வேர்ட்ஸ் ஒற்றுமை உலகம்" சென்று அறிவீர்!]


பெண்ணடிமை பேத விலங்கு ஓர் ஊழல்!
ஆண்மோகம் ஆன்மிகம் என்றாயிற்று!

நாக தோஷம் என்பதாய் ஓர் ஊழல்!
பாரத துணைக் கண்டம் லெமூரியாக என்று;
பரவியிருந்த  நாகர் பெருநாடு...  
சுவடேதும் இன்றி மறைந்துற்றது!

தசரதன் தேர்சக்கரத்தில் ஓர் ஊழல்!
பட்டத்துஅரசி  மூத்தாள் மகன்...  

மண்ணின் மைந்தன் பரதன் அயோத்தியை,
[நாடு ஆளும் உரிமையை
அநீதியாய் இழக்கும்படி ஆயிற்று!

பரதன்தன் அரசு அரியணையில் செருப்புக்களை
வைத்து ஆண்டிட்டதாக ஓர் ஊழல்! 

அது பாரததேசத்தை, தேசஇறையாண்மையை,
மக்களை; இன்றும் கேவலப் படுத்திடும்...

'வதந்தியாய்' உலாவுகின்றது!

கற்ப்பிப்பதில்  கடவுள்பொய் வதந்திகளாய்;  
கடவுள் நம்பிக்கையை...

அரிசியில் மண்கல்அன்ன, 
மதத் திகில்களை;
அரசியலில் கலப்பது... 
எப்போதும முடிவுறா திருட்டு! [அந்தப்படிக்கு]

ஒற்றுமை விலகி பேதம் ஓதி நாட்டுள்...
வேற்றுமையை நுழைப்பது ஊழல்!

இதில் இந்தியத் துணைக் கண்டம்,  
ஏற்கெனவே மூன்றுப்  பட்டுள்ளது!

ஆண் விந்தணுக்கள் + கைபர் போலன் 
கணவாய்கள் வழி சாதிகள் ஓர் ஊழல்!

இதில் சிந்து [மட ஆதி பதி]  எனும் ஓர் சொல்... 
இந்து'என திரிந்துற்றது!

இதில் காந்திஜியை தின்றிட்ட 
RSS கூச்சல் ஓர் ஊழல்!
அதனால் BJPஆட்சி கருவுற்றது!

சாதிகளால் துன்புறுத்தும் பேதமன நோயர்கள்!   
மண்ணின் மைந்தரை [மதம் மாறிடுவோரை] 
இந்து என்பது ஓர் ஊழல்! 

[உலக மாமேதை மானமிகு அம்பேத்கார் 
அவர் மறைந்த நாளில் இந்துவாக இல்லை]


நரசிம்ம அவதாரம் என்பதாக ஓர் ஊழல்!
சைவத்துள் வைணவம் புழுத் திட்டது!

அப்பன், இரணியன்...

மகன் பிரகலாதன் உறவு அறுந்துற்றது!


மக்கள் - ஆரியர் அல்லாத அன்றைய 

ஐம் மொழி தமிழர் [திராவிடர்]  
சைவம் வைணவம் என பிளவுற்று 
இரண்டுப்பட்டனர்!
ஒரு சகோதர பிரிவினரை 
பகைமையில் மற்றோர் பிரிவினர் 
[ஒரே நேரத்தில் கழுவில் ஆயிரம் பேரை]* 
கொன்றனர்!

ஆண்டுதோரும் கொலுப் பொம்மை காட்சிகள்
ஓர் மத ஊழல்!

அந்தப்படிக்கு  மக்கள் நினைவில் இருந்து... 
கழுவில் ஆயிரம் பேரைக் கொன்ற நேர்வு,
மறைவுற்றது!   

இந்தப் படிக்கு பேதப் முட்புதர்  இந்துத்துவா

களை முளைந்துற்றது!

அதனால் -
அன்புக்கு ஓநாய்! வம்புக்கு, தெரு நாய்... மதம்! 

[*கழுவில் ஏற்றுதல்  என்பதானது, கழுவிட்ட 
மரக் கொம்பை ஒரு முனையை கூராக்கி [சீவி], 
கூர்முனையானது வானம்பார்தவாறு நட்டு 
எண்ணெயிட்டு கூர்முனை மீது அமர்ந்த நிலையில் 
உட்காரும்படிச் செய்து கொல்வது.]


https://plus.google.com/u/0/photos/108768789583592379715/
albums/6095861801431962865/6095861808576241698

No comments:

Post a Comment