Photo: Entertainment World
அவன்:
ஆசைத் துளிரும் தளத்துள்ளே - உன்
அன்புக்கரு சிரிக்கும் நிலத்திலே...
ஈரஇசை அலைச் சுழலும் அரங்கமே!
இணை,வா! என்மகரந்த சுரங்கமே!
அவள்:
வளர்ந்த கொடியின் அசைவிலே,
கனியபூ இதழ்கள் விரியவே - காதல்...
நிலவு உன்முன் ஒளிரகண் சிவக்கவே!
என்பருவத் துருவத்திசைகளில் எதில்நீ
என்னைக் கண்டு மயங்கிட்டாய்?
அவன்:
உன்னைஈந்து என் மனத்துள்ளே...
வளரநம் காதல் அன்பு வனத்திலே;
உன்றன் தவிப்பின் வெடிப்புள்ளே...
புதியகாவியம் நடத்தஉன் சம்மதம் தா!
No comments:
Post a Comment