Kalyani Srikar
உன்னையே நினைத்தேன்!
என்னையே கொடுத்தேன்!
என்னுள்ளே சிரித்தாய்! [என்]
கண்ணுலேநீ ஒளிர்ந்தாய்!
பட்டாம்பூச்சி போன்றே,
சிறகுகளை விரித்தேன்!
கட்டாந் தரையில் கூட... நீ
கவிதைகள் படித்தாய்!
ஓட்டாப்பனிஅன்ன என்மீது,
உருண்டு மறைந்தாய்!
எட்டாக்கனியாக இன்று...
எங்கேயோ அசைகின்றாய்!
சூடான நினைவுக்குள் வெந்நீர் - இது
விண்ணிலே உலாவும் மேகம்;
மண்மேல், தூவும்; காதல்...
மழையானால் தண்ணீர்!
No comments:
Post a Comment