Photo:diesmel antoima
தினம் பேதஓதல் விழா, நெய்வீணடிப்பு
நிகழ்வுகளால், இந்துத்துவா அறிவில்லா
யாகம்... ஓர் ஊழல்!
அதனால் முதலீடில்லா மூடநம்பிக்கை
வியாபாரம், விபச்சாரம் அன்ன; ஆயிரம்
ஆண்டுகட்கும் மேலாய் நடந்துற்றது!
அன்றாடம் பசு நெய் ஏராளமாய் நாசமாய்
எரி நெருப்புள் கரிகிட்டது!
இதனால் நெய், வெண்ணை, தயிர், பால்
பற்றாக்குறை பரவிற்று!
பால் விலை நிர்ணயம் மூடர் நம்பிக்கை
யாகங்களால் முடிவுக்கு வராது தொடர்ந்து
ஏற்றமுற்று எகிறிட்டது!
இதனால் வேற்றுமைத் தீட்டினம் மாடுகள்
பொய்ப் பரிவு ஓதல்கள் தொடர்ந்திட்டன!
இறைச்சி உண்ணல் கூடாது என்று மானுட
வதை வன்கொடுமை ஆதரவு குரங்குப் படை
ஊர்வலமாக சென்றிட்டது!
தவிர பசுநெய், வெண்ணை, தயிர், மோரோடு
பாலும்... ஏழை எளியோர் உண்ணலுக்குப்
பயன்படுத்திட முடியாதவாறு...
காய் கறிகள் அரிசி அன்ன அவை யாவும்,
விலைக் குறைவுள் எப்போதும் இல்லை;
எனும்படிக்கு... நிலைமை ஆயிற்று!
இந்நிலவரத்தால், தொழிலாளி உழைப்பு
இழப்பு, சீர் செய்திட வழியற்று; உழைப்பாளி
உடல்வலிமைக்கு ஊறு நேர்ந்துற்றது!
அவர் உடல்நலம் நாளும் நலிவுற்று, வாழும்
நாட்கள் எண்ணிக்கையில் குறைவுற்றன!
புகா போது நீரும் சோறும் வயுற்றுள்;
மகா சக்தி தளரும் பசிப் பிணி தொடர...
சதா ஓர் ஏழை தரித்திர நோயில் பாயில்;
ஏதாம் கடவுள் இயம்பேன் அறிவே!
குடிசையும் இல்லாது ஏழை கும்பிதினம் எரிய,
*அடிசில் இன்றி அவ்வப் போது சரிந்து சாக,
மடமை சாதிமதத்தால் மானுடம் சிதைவு தொடர;
தடைஏன்? மதம் மாற; முன்னேற, கடமைசெய்;
கடவுள்பேதம் விலகு! நாடு ஒற்றுமைப் போற்று!
*அடிசில் - சோறு
No comments:
Post a Comment