Saturday, 24 January 2015

நரசிம்ம அவதாரம் என்பதாக ஓர் ஊழல்!

  Photo : gIrIsH kUmAr


நரசிம்ம அவதாரம் என்பதாக ஓர் ஊழல்!

நரசிம்ம அவதாரம் என்பதாக ஓர் ஊழல்!

அதனால் வைணவதாசன் பித்தன் பிரகலாதன்,
அவனுடைய தகப்பன் சைவ மாமன்னன்
இரண்யனை  யாரும் இல்லாத நேரத்தில்;
பின்புறமாக தூணின்மறைவில் இருந்து...
வெளிப்பட்டுத் தாக்கிக் கொன்றான் என்பதும்;

பேதசாதி சமயமார்க்க வெறியன் பிரகலாதன்...
தான் நரசிம்ம அவதாரமாக, முதலாம் அன்னியர்
களால் பிரபலப்படுத்தப் பட்டான் என்பதும்;
யாரும் அறிந்திடாத சிதம்பர இரகசியமாயிற்று!

பசுவதை கூடாது என்று அவ்வப்போது... 

ஓசை செய்கின்றவன் அன்றாடம், தாய்பசு மற்றும்
கன்றுகளை ஏமாற்றி நெய்யாக மாற்றி;
யாகம் என்ற பெயரில் நெருப்பில் ஒழுக...
விடுவதும் கரிந்திடச் செய்வதும் எதற்காகவாம்?

1)  ஏழைகளில் ஒருவரும் அன்றாடம் நெய் உண்டு
     பலசாலியாக ஆகிடாதுத் தடுத்திடும் கெட்ட...
     எண்ணத்தில் நெய் விலையை உயரும்படி,
     செய்திடவோ?

2)  இராமன் ஏற்ப்பாட்டின் படி வாலில் கட்டி
     விடப்பட்ட நெருப்புப் பந்தத்தோடு தாவிச்
     சென்ற குரங்கு ஒன்று [கதைப் படிக்கு
     அனுமன் என்று சொல்லப்படுவது]  குடிசைகள்
     சாம்பலாக இலங்கையை எரிதிட்டதாய்...
     செப்பிடும் நிகழ்வை நினைவுப்படுத்தி,
     மகிழ்ந்திடவோ?

3)  இந்துத்துவ வன்கொடுமைகளில் இருந்து,
     விடுப்பட்டு வாழ்வில் முன்னேற தாழ்த்தப்
     பட்டோர் மதம்மாறிடாமல் தடுத்திட...
  
    அச்சுறுத்திடும் கற்பழிப்பு வன்கொடுமைகள்,
     போதாது என்று குடிசைகளையும் எரியுங்கள்;
     இடம் பெயர்ந்து செல்லட்டும்; என்று குரங்கு
     மதப்படையினருக்கு மறைமுகமாக நினைவுப்
     படுத்திடவோ?

4)  ஆக, மதம் என்ற பெயரில்  நெய்மட்டும் அன்று,
      பொருளாதாரதையும் அறிவியலை விலகி...
      வீணாக்கலாம்;  எந்த அரசும் தடை செய்யாது,
      என்று மனுஸ்மிருதி ஆணவத்தைக் காட்டவோ?

--   சொல் என் அறிவே!

No comments:

Post a Comment