Photo: Found Pix
எனக்கும் உனக்கும் இருக்கும் பிணக்கில்
கணக்கு தவறாயிற்று - என்
கவிதை பிழையாயிற்று!
உனக்குள் எரியும் பிரிவு எனக்குள்...
நெருப்புக் குழம்பாயிற்று - காதல்,
சாம்பல் நிலமாயிற்று!
கொடிக்குள் சிரிக்கும் மணக்கும்பூ மகிழ,
இதழ்கள் விரிப்பில் மயக்கம் உண்டாயிற்று;
ஆசை தேன் அருந்தும் வண்டாகி...
உண்டுப் பறந்திட்டது!
திமிறக் கவிழ்ந்தேன்; தேகம் புவியோ?
நிமிர மலர்ந்தேன்! நினைவுள் அமிழ்ந்தேன்!
அமிழ்த நிலையில், அவனின்தீ யாகம்!
உமிழ அதிலும் உருண்டேன்... [ஏன்?]
No comments:
Post a Comment