Friday, 27 March 2015

உன் ​ஈட்டிவிழி கூர்நோக்குகள்என், பட்டி​டை​மேல் வழுக்கிவிழ...

 
Photos :    Taylor Swift Universe

அழகியபிறை நுதலாள்என்னை அணுகிஉன் பார்வை மேய;
உலகநிலைஎன் அழகுகளோ உனக்கென உண்​​என்று உருள;
கலகம்செய் அச்சுஇதழ் அன்னகாதல், கச்சிதமாய் மூளையுள் அமர;
விலகஉன்னை இயலாமல் உன்சை, வென்றிட்டது என்னையே!

ஊட்டி மலைசிகர நுனிகளை ஊடுருவி வருடிடும்பளீர் ஒளியெனவே
ஈட்டிகளாய்நீ விழிகளால் துளைக்கஎறிந்திட்ட கூர்நோக்குகள்என்,
பட்டிடைமேல் வழுக்கிவிழ பாசக்கனி கட்டழகிநான் உன்னைத்தழுவ;
ஆட்டிவிட்ட பம்பரமாய்  ​​சைந்தாடு​​தே உன்காதல் உணர்வுகளே!

பட்டிலை நூற்கும் பருவஆலிலை பூமிமேல், இரண்டுபட;
வெட்டிட்  மாம்பழத்துள் சரிபாதி வெட்ஏங்கிடும் காட்சிப்போல்,
வெற்றிலை மத்தியில் வைத்திட்டஓர் பாக்குஅன்ன, கண்டுகடல்;
முத்துஅமிழ்ந்து உன்புன் முறுவல்முன், நாணிடுதேஏன்?

கனியாய் பூகனிய தழுவுகொம்பை காதலிக்கும் கொடியே!
பனியோ உருண்டு படிந்திட்டதே,  புள்வெளி எழில்மேல்;
பிணியாய் என்னைவிலகாது பின்தொடர்ந்திடும் என்நிலவே!
அணிமுகிலைநீ அகற்றஎன்பூ இதழ்கள் சிரிக்கின்றனஏன்?

அமிழ்த சுரபியாம் யாதுஅது என்றாய்;
திமிரே உன்னை திணறிடிப்பேன்; இங்கே,
குமுதவாயாள் கண்ணை குறைவிலாது நோக்கு;
அமிழ்தாய்  சுனைத்தெரியும்  ஆய், வா!

 

No comments:

Post a Comment