Photo : Thanthi TV
ஆதிமைந்தன் ஒன்றலின்றி ஆளும் நிலைச்சிதற;
பேதவம்சம் இந்துஎன்றுஒன் றிற்று!
இந்து மதமல்ல ஏய்க்கின்ற பேதவம்சம்;
ஒற்று மைஉடைக்கும் மார்க்கம்!
பொய்க்குப் புராணம் பொறுப்பின்றி நெய்த்தீய்க்கும்;
செய்கைக்கு யாகம்என்றும்; தைக்கு கணவன்தான்,
தெய்வ செயலென்றும்; தீண்டாமை ஓதுவான்;
பைக்குள் பணம்புதைந்தால் வாழ்க்கை!
தீட்டுத் தினவெடுத்து
செல்லும் திசையெல்லாம்...
ஆட்டுத் தசைகொண்டு அத்தனையும் தீண்டுகின்றான்!
மாட்டுச் சதைஎன்றால் மைத்துனன்நாய் ஆகின்றான்!
ஆட்டுத் தசைகொண்டு அத்தனையும் தீண்டுகின்றான்!
மாட்டுச் சதைஎன்றால் மைத்துனன்நாய் ஆகின்றான்!
மாட்டு எலும்புஅன்ன மாண்டகுதிரை அன்றுதின்றான்!
மாட்டிறைச்சி பாடகனை மாற்று!
இறைச்சி உண்ணும் மானுடரை இகழ்ந்தி கழ்ந்து சாடுறீர்!
இறைச்சி யால்உடம் பிருக்க இகழ்ந்து பேசல் ஆகுமோ?
இறைச்சி யோடு இறைச்சி சேர இறைச்சி யான; மூடரே!
இறைச்சிநீக்கி நரம்பெழும்பில் இயங்கஉம்மால் இயலுமோ?

No comments:
Post a Comment