Friday, 8 May 2015

பூக்கும்முன் ​மொக்குத் ​தொட்டு வண்டு ஆட லாமா?



Photo: NeHaL NeVgI



 
அவன்:
செல்லச் சிரிப்பில் கன்னிநீ என்னை                                                                              மயக்கும் வயதா?

அவள்:
உறக்கம் விலக உள்ளம் யங்க - உன்னுள்                             பின்னும்சுகம் சுரக்கின்றதா?

சின்னப் ​பெண்ணுக்குக் காதல்வர லாமா?
மாமன் -
கன்னி என்னைத்
தொட்டுத் தூக்க  லாமா?

பூமொக்குக்குள் தாபம்வர லாமா?
பூக்கும்முன் மொக்குத் ​தொட்டு
வண்டு ஆட லாமா?

பேதைக்கு ஆசைவர லாமா?
மாமன் போதைக்குள் மூழ்க தூதுவிட லாமா?
தூதுவிட்டால்  பாதை காட்டலாமா?
நீமட்டும் காதல் தாதை அள்ளி...                                           உச்சி முகர்ந்து கிறங்க லாமா? லாமா?                                                                                                                                                                   

No comments:

Post a Comment