Thursday, 14 May 2015

அன்பே! உன்னால்தான் எனக்கு காதல், வாழ்கை ஆயிற்று!


 Photos :  Laura Sanna SheWolf


கிளியே! செல்... 
என் காதல்  உயிர் வாயு,
அருகில் இல்லாததால்; 

        அடிக்கடி எனக்குள்...
        மூச்சுத் திணறல்! 

கரியமில வாயுவிடம் இருந்து, 
என் சுவாசத்தை பிரித்தெடுத்து வா! 


அன்பே!

உன்னிலிருந்து காதல் விதைப்பெற்றேன்!
கற்பனைக் கொடிவளர்த்தேன்!
       மகரந்தங்களை தூவிவிட்டேன்!


என்னிலிருந்து கனிகள் மணங்களை
       காற்றில உதிர்த்திட்டேன்!

உன்னால் நான் குடும்பத்தைத்
       தொலைத்துவிட்டேன்!
உன்னால் என்றன் 

       உறக்கம் மறித்திட்டது!
என்றன்உயிரை
       நம்காதல் காப்பாற்றுகின்றது!

உன்னால் என்றன்,
       சிந்தனை முளைவிட்டது!
கற்பனைகள் விரிந்திட்டன!
       காவிய கவிதைகள் மணக்கின்றன!

உன்னால்தான் எனக்கு; 
காதல், வாழ்கை ஆயிற்று!


Cover photo

No comments:

Post a Comment