Saturday, 16 May 2015

அன்பு செய்வதில் சிறந்தவர் யார் என்றால்....



 
  புகைப்படம் :  Dinakaran TamilNews




அன்பு செய்வதில் சிறந்தவர் யார் என்றால்....     

இயற்கைச் சுழலுள் இயங்கி நெழிந்து
மயங்கி கரைந்து மனத்தால் முயங்கிட்ட
பெற்றோர் குப்பிறந்து பெற்றோராய் மாறி
பெறுவோரை பிரசவிக்கும் தாயே!

அருந்தும்பால் கெட்டால் அருந்துதல்தீ தென்று,
விரையமாக கொட்டுவாய் வீதியில்; எந்நோயும்,
மருந்தினால் மாய; மரணமும் நேர,
தெருத்தோரும் கோயில் எதற்கு?

கோ என்றால் அரசன்! இல் என்றால் வீடு!
கோயில் என்றால் செத்திட்ட அரசனின்
சமாதி ​மேடு! அது சுற்றுச்சுவரோடு
அமைந்திட்டதனால் அரண்மனை!

தெய் என்றால் கொலை! தெய்வம் என்றால்
கொலை செய்திட்ட செய்கின்ற மிருகம்!
மானுடத்துள மிருகம் என்பான் யார்?
கர்ணனைக் கொலை செய்தான் கண்ணன்!
அவனும் அரசன்! பறையும் நரசிம்மம்
மானுடம் என்று ஓத இயலாதே!

இறை என்றால் திரை! திரை என்றால் வரி!
வரிவசூல்களை தன்ஒருவன் உடமையாக
ஆக்கிட்ட கொள்ளையன் யாா? அரசன்!
இறை என்றால் உணவு பெண்டிர் உட்பட
எதையும் தன்உணவாக்கிட்ட மானுடன்
யார்? அவனும் அரசன்!

கடவம் என்றால் நாடு, கேடயம், போர்ப்படை
ஆக இம்மூன்று கடவங்கட்கும் அதாவது
நாடு, கேடயம், போர்ப்படை ஆகிய உடமைகட்கும்
அன்றும் இன்றும் உரிமையாளன் யார் என்றால்
ஆய்ந்து தெளிவாயே! கடவுளும் செத்த அரசனே!

இப்போது சொல்... சொல் மானுடத்துள்
படைத்தோர் யார் படைப்பவர் யார் என்றால்
அனைவரும் உண்ண தானியங்கள் காய்கனிகள்
படைப்பதற்கு ஏர்உழுது அழுகின்ற விவசாயி! நீ
உடமைப்பெற உழைத்து மடிகின்ற தொழிலாளி!

No comments:

Post a Comment