Photos: Mermaids Page
யோகா ஆரியர்களின் கலை எனும் இந்துத்துவா கூச்சல் ஓர் காட்டாற்று ஊழல்!
யோகா
ஆரியர்களின் பண்டைய கலை என்பதாகப் பறையும் இன்றைய இந்துத்துவா பேதஅம்ச
காட்டுமிராண்டிகளின் கூச்சல் ஓர் காட்டாற்றுத் தனமான ஊழல்!
அதனால்
ஆரியன் என்பதன் அப்பட்டமான எதிர்பதமாய் உச்சரிக்கப்படும் சூரியன் என்கின்ற
சொல் இன்றைய பஞ்சமர்களின் முதாதையர் முன்னோடி ஒருவரை குறிப்பிடுவது
என்பதும் அதனால் சூரிய வணக்கம் என்பதானது சூத்திரர்கள் உள்ளிட்டு பஞ்சமனை
(நாகர் வம்சத்தாரை) வணங்கிடுவது என்கின்ற உண்மை மறைந்துற்றது.
ஒருபோது யோகியே! ஒண்டளிர்கை மாதே!
இருப்போது போகியே! என்றும் திரிப்போது
ரோகியே! நான்குபோது உண்பான் உடல்விட்டு
போகுமே ஆவி புகல்!
இது பண்டைய ஓர் ஆதி தமிழ் சித்தரின் மருத்துவயியல் அற்புதப் பாடல்.
உ(ப)யோகம்
என்பன் சொற்சுருக்கம் யோகம். (உ)யோகம் என்கின்ற தமிழ் சொல்லில்
இருந்து வருந்துற்றது யோகி! யோகம் என்பதற்கு அடையப் பெறுதற்கு அரிதானதாக
பெறுவது என்று அறியப்படுகிறது. யோகம், என்பது 'யோகா' என்றாயிற்று.
ஆக. யோகம் என்பதும் அதன் செற்சுருக்கமான யோகா என்பதும் மற்றும் யோகி என்பதும் மொஹன்சதாரோ கால தமிழ் சொற்கள்.
தியாகம்
என்பதின் சொற்சுருக்கம் யாகம். இன்று யாகம் என்பதானது ஆரியர்களின்
தவறான மத நடைமுறைகளால் அவர்களின் உரிமைச் சொல்லாக உலாவுகின்றது. யாகம்
என்பதானது யோகாவுக்கு எதிர்பத சொல்லாக அறியப்படுகிறது. யாகம் என்பது பேத
ஓதல்களை (பிரிவினை களை உண்டுப்பண்ண) செய்திடுவது; யோகா என்பதானது உடலும்
மனமும் ஒருநிலைப்படுவது என்பதாக அறியப்படுகிறது!
யாகம்
பேத அம்சத்தவன் ஆரியர்களின் தீய உள்எண்ணங்களை வெளிப்படையாக
பிரதிபலிப்பது. ஆரியர்களின் யோகா என்பது உலகத்தார் உள்ளம் மற்றும் உடல்நலம் மீது
அக்கறை யுள்ளது போல் போலியாக சித்தரித்து அனைவரையும் அடிமைகளாக்கிட
முற்படுவது.
யோகா
என்பது உடற்பயிற்சித் தொகுப்புக்களின் ஒரு கூறு என்பதாக ஆரியர்களால்
அறிமுகப்படுத்தப் படுவதில்லை. மாறாக அது இந்துமதக் கோட்பாடுகளின் ஓர் அங்கமாக
விளம்பரப்படுத்தப்படுகிறது. இந் நிலவரத்தால் யாகம் என்பதன் போலியாக
யோகா(வுக்கு) எதிரும் புதிருமாக உள்ள ஓர் பங்காளிஅன்ன ஆகிற்று.
மேலே
உள்ள பண்டைய சித்ததர் பாடல்படிக்கு பிரதான யோகியாக இருந்துற்றவன்
புத்தன். யோகாவின் முதிர்ச்சியுற்ற நிலைகளாக இன்று குங்பூ கராத்தே
மற்றும் மற்போர் வகையறாக்கள். ஞான வேந்தர் புத்தர் மறைவிற்குப் பின்னர்
சப்பான் உள்ளிட்ட வெளி நாடுகட்கு பெளத்தம் கப்பலேறும்படிக்கு முதலாம்
அன்னியன் ஆரியன் மண்ணின் மைந்தர்களை திறமையற்றவர்களாக தவிர நிரந்திர
அடிமைகளாகவும் மாற்றிடும் கெட்ட உள்நோக்கத்தில் செய்திட்டதால் இன்று
குங்பூ கராத்தே மற்றும் மற்போர் வகையறாக்கள் வெளிநாட்டினரின்
உரிமையாயிற்று.
நாகர்
எனப்படும் ஆதிதமிழர்களிடமிருந்து நாகரிகம் எனும் தமிழ் சொல் கருஆயிற்று.
நாகரிகம் என்கின்ற ஆதிதமிழ் சொல்லுக்கு அடிப்படையாகவும் ஆதாரமாகவும்
இருந்திடுவது நாகர் மானுடம். இது நாகர் கோயில், நாக வள்ளி அம்மன் போன்ற சொல் ஆதிக்கங்களின் வலிமையால் அறிப்படுகிறது.
நாகர்களிடையே
புலக்த்தில் இருந்திட்ட கனிவு, பாசம், துணிவு, பண்பாடு; கழலாச்சாரம் ஆக
அவர்களின் நற்குண நடைமுறையானது நாகரிகம் என்று பெயர்பெற்றது. அவ்வாறு
நாகரிகம் அறிந்திருந்த நாகர்கள் வேல், வாள், மற்போர், வில்
போர்திறன்களுடன் இருந்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிட முடியாது.
கைபர் போலன் நாகரிகம் என்பதானது நாகர்களுடையது என்பதால் அவர்கள் காட்டு
வாசிகளாக இருந்திடவில்லை.
அந்தப்படிக்கு
மானுடத்தில் நாகரிகத்தினூடே தோன்றிட்ட நாகர் வம்சத் தலைவன் ஏக அலை அவன்,
வில் பயிற்சியினையும் மற்றும் வேல் எறிதல், வாள் பிரயோகம், மற்போர்
நிகழ்சிகளுக்குள் தன் முழுகவனத்தையும் செலுத்திக்கொண்டிருந்த அவ்வேகளில்
காட்டு மிராண்டிகளாய் கைபர் போலன் கணவாய்கள் வழியே சிந்து நதி
பள்ளதாக்குகளில் (காடுகளினூடே) பரவிட்ட முதலாம் அன்னியர்கள் அவர்களில்
துரோக இன ஆச்சாரியான் மானுட நாகரிக அறிவற்றவனாக இருந்திட்ட
நிலைமையில், மேற்படி போர் நுணுக்கங்களைத் தெரிந்திருந்திடாத நிலையில் ஏக
அலை அவன், போர் பயிற்சி நடைமுறைகளை மண்ணின் மைந்தர்களை அடிமையாக்கிடும்
முயற்சியில் வனமறைவினூடே மறைந்து கவனித்து கற்கும் நெருக்கடியில்
இருந்துற்றான்.
அந்தப்படிக்கு
நாகரிகம் கைவரப் பெற்றிருந்த நாகர் அம்சத் தலைவன் ஏக அலை அவன் யோகநிலை
கலை ஞானத்தை வனமறைவில் ஒளிந்திருந்து கண்டான், கற்றான்; மாது, குதிரை
மாமிசம், சோமபானம் (குதிரைக்கால் சூப்பு) இம்மூன்றோடு மூன்று வேளைகள்
நாளொன்றுக்கு உண்டு கொழுத்திட்ட முதலாம் அன்னியரின் பிரதான வாரிசு
துரோக இன ஆச்சாரியான். நாக அம்சத் தலைவன் ஏக அலை அவனின், யோகா கலை
ஞான வழியில் துரோக இன ஆச்சாரியான் ஆதி காட்டுவாசிகள் கூட்டத்தை (இன்று
குரங்குகளாக சித்தரித்திடும் காட்டு மிராண்டிகளை) ஒருங்கிணைத்தான். அன்றைய
காலகட்டத்தில் அவ்வாறு ஒருங்கிணைக்க துரோக இன ஆச்சாரியானுக்கு கயிறாக
உதவிட்டது ஆதி நாகர்களிடையே புழக்கத்தில் இருந்திட்ட சூரிய வணக்கம்.
ஆனால்
ஆரியன் என்பதற்கு அப்பட்டமான எதிர்பதமாக தக்க அடிப்படை மற்றும்
ஆதாரங்களுடன் வெளிப்படும் சொல் சூரியன் என்பது. ஆரியர்களின் ஓதல்கள்படி
இராமாயணம் மகாபாரதம் கதைகளில் தெரியவருகிறபடி சூரிய வணக்கம்
ஆரியர்களுடையதல்ல. (தனியே ஓர் கட்டுரை இக்கருத்துரை முடிவில் அடுத்து
தரப்பட்டுள்ள தலைப்பை அழுத்துதல் செய்து தெரிந்து கொள்ளுங்கள்)
மேற்குறிப்பிட்ட
கதைகள்படிக்கு சூரியன் என்கின்ற சொல் இன்று பஞசமன் எனப்படுகின்றவனின்
மூதாதையர் முன்னோடி ஒருவரை குறிப்பது என்பதும் அதனால் சூரிய வணக்கம்
என்பது சூத்திரர்கள் உள்ளிட்ட பஞசமனை போற்றிடுவது என்கின்ற உண்மை
சிதம்பர இரகசியம் அன்ன மறைந்துற்றது.
Press ENTER: ஆரியர்கள் இராதவனை சூரிய வம்சத்தவர் என்பதாக பரப்பிட்ட வதந்தி ஓர் ஊழல்.
No comments:
Post a Comment