செங்கலுள்
கருங்கலுள் சிற்பி செதுக்கிய பொம்மைகளுள்…
உங்கள்
தெய்வம் இருப்பதாக ஓதிஊழல் புரிகின்றீர்!
எங்குஅக்
கடவுள் காட்டென்றால் காட்டிடாது விழிக்கிறீர்
மண்சிலைகள் பேசுமோ? மதம்விலக, நாடுஉயருமே!
எங்கும்
இல்லா இறைவனை ஏங்கிக் காணத் தேடியே…
எங்கும்
இல்லா இறைவனை நாடி கோயில் குளங்களே…
செல்லுகின்ற
மானுடமே! தீண்டும் சாவு நிற்குமோ?
சொல்லுகின்ற
கடவுளும் நேரில் காண தோன்றுமோ?
தேடி
எங்கும் இல்லா இறைவனை,
தேடித் தேடி இருப்பதாக;
நாடி
நாடெங்கிலும் நாடி கோயில்கள்,
குளங்கள் சுற்றியே!
வாடி
வாழ்நாளில் எவனுமே...
தெய்வம் தோன்றக் கண்டதில்லையே!
கோடி
கோடி செத்தும் ஒருவனும்...
திரும்ப பிறந்ததும் இல்லையே!
இறைவன்
எந்த உருவிலும் இல்லை இல்லை இல்லையே!
இறைவன்
எந்த பொருளிலும் இல்லை இல்லை இல்லையே!
இறைவன்
எந்த உணர்விலும் இல்லை இல்லை இல்லையே!
இறைவன்
எந்த நிலையிலும் இல்லை இல்லை இல்லையே!
எந்தவோர்
உருவிலும் எந்தவோர் பொருளிலும்,
எந்தவோர்
உணர்விலும் இல்லைஎனும் நிலையிலும்,
தந்திரமே
எனும்படிக்கு உள்ளஉன் பிதற்றல்களை;
எந்தவோர்
ஆதாரத்திலே இறைவன் என்று போற்றுவேன்!
இன்றும்
அன்றும் என்றுமே இதிலும் அதிலும் எதிலுமே…
இங்கும்
அங்கும் எங்குமே இயற்கை செயற்கை யாவிலும்…
உருவில்
அருவில் உணர்விலே உலகில் எந்த பொருளாகவும்…
அறிவில்
ஆய்ந்தபின் பறைகிறீர் இறைவன் இல்லை இல்லையே!
No comments:
Post a Comment