

Join ✿ ~ •► Love Quotes
பாற்கடல்வெண்ணெய் உண்டதாக பறைவோர்...
தெய்வங்கள் எங்கே?
பாற்கடலை கடைந்ததாக ஓதுவோனின்...
தேவர்அசுரர் எங்கே?
திங்கள்பிறை அணிந்திட்ட இடுகாட்டு
சிவப்பெருமான் எங்கே?
உட்கார்ந்தநிலைகளில்...
பாடைகளிலே கண்டேன்!
சங்குகரன் தங்கைமகன்! யானைமுகன் எங்கே?
தங்கநிறன் கங்கையணி பிறையோன்முருகன் எங்கே?
பாற்கடலை கடைந்திட்ட மத்துமலை எங்கே?
பொங்கிட்ட பாற்கடல்உலக வரைப்படத்தில் எங்கே?
பாற்கடலை உலக வரைப்படத்தில் தேடுகின்றேன்…
திசைஎது? தெரியவில்லை!
பாற்கடலை எங்கென்றே பக்தியில் பார்த்தவர்கள் யார்?
யாரும் சொல்ல இல்லை!
பாற்கடல்மேல் பாம்பு இருப்பதாக...
பேதசாதி ஓநாய்கள்;
ஓதுகிற இக்குற்றச்செயல், எதற்கோ?
ஆய்க; என்அறிவே!
மங்கையொரு பங்கன் அந்தபங்கனின்...
மைத்துனன் பெருமாள் எங்கே?
கரிகரசுதன் கதைப்படி எங்கே?
நான்முகன் பிரம்மன் அந்த சிங்கமுகன் நரசிம்மன்
இருகடவுளும்தான் எங்கே?
சங்குகரன் தங்கை அங்கையற் கண்ணி எங்கே?
மங்கையர் மூதேவியர் அலைமலைகலை எங்கே?
அய்ங்கரத்தோன் எங்கே? ஆறுமுகன் எங்கே?
இன்னும் யார்யாரோ தெய்வம்என்று தேரில் உயிரோடு
பக்தர்காண அனைவரையும் கட்டி இழுத்துவா இங்கே!
No comments:
Post a Comment