Tuesday, 13 October 2015

பிறப்பு குறிகளுக்குள் பேதம்கணித்த தகுதி என்னஆயிற்று?

  
    Photo:   Prakash JP




மூத்திரம் பெய்குழிவழி, பாடம்கல்லாமல் பெற்ற
இலவச சாதிப் பட்டம்;

நேற்று வீசிட்ட காலக் காற்றில்வந்து அடையும்முன்
அதுசூன்யமே! முற்றும்;

வேற்று ஊருள் விரிந்திட்ட விளங்காத முட்புதர்; 
காடு என்று தெரிந்தும்தம்

சேற்று கற்றாலை சோற்றுக் கற்றாலைஆகி;
பூக்களைக் காட்டி, அறிவியல் வாழ்வில்

தோற்றுஇட ஒதுக்கீடுஉன் மூக்குசு வாசத்தில்;
பங்கு கொடுஎன ஊ​ளையிடும்…

காட்டு ஓநாய்கள் பேத​​ மை​யை ஆணவமாய் ​கொட்ட…
இவர்தலை முகம்மேல் விழுந்தனவே?

பிறப்பு குறிகளுக்குள் பேதம்கணித்த தகுதி என்னஆயிற்று?
கருஉரு ஆகும்மூல மேடுகட்கு சாதிகள் பெயரிட்டு 



திருட்டு சூதுசூழ்ச்சிகளை திறமைஎனப் பறையாதே!
திருந்திடு? நிமிர்ந்து முன்னேறு; முயற்சிசெய் இயலுமே!


ஆச்சரியக் குறியே! எம்தொண் தமிழ்சங்கம் புகழே!       
பூச்சொரிய பாடல்ஒன்றுப் பாட மேடைஏறும் போதுநீ
தேர்ந்ததகுதி பேரில்,அவன் பிறவிப்புழுதி படியலாமா? - உன்
திறமை மீதுவெறியன் சாணசாதி விழவும் விடலாமா?

அறிவியல் நர(ன்)வினா நாயகனனே!  உன்முன்;
பரந்தவான் தொட்டு தகுந்த பதில்கள் சமர்ப்பிக்க
வாழ்வில் ஓதும் படைப்பு ஆண்டவன் வருவானா?
கேள்வியும் நீயே விடையும் நீயே ஆயநீ  அறிவாயே?

தாயின் மடியில் அமர்ந்து தாய்மொழி பருகி வளர்ந்தாய்!
காயம் வியக்க கற்று அறிஞனாக எழுந்தாய்!
சாதிஓதும் குறிகளில் இல்லை சமய சாயம் இலலை;
108 தேங்காய் கள்உடைக்கும் ஊழலும் இல்லை!

வெற்றிச் சிகரம் அடைய அங்கே ஓதுவோனின்
பேதப் புழுதிகள் படிய லாமா? - உன்
திறமைகள் மேல் சாணம் ஆரியநோய் கிருமிகளே!
தோழ்வி நெருங்கலாம்; வருட இடம்தராதே!       

வாழ்வு என்ன வாழ்வு என்று இறங்கி முடங்கிடாதே!                                        
வளையும் முதுகை நிமிர்த்தி எவனிலும்...                                                      
உயர்ந்தவன் நீயேஎன காட்டவேண்டும் - பாருள்நீ                                                                        
ஒற்றுமைக்கு  பாலம் அமைக்கவும்  வேண்டும்!

[மேலும் படி]:

No comments:

Post a Comment