புகைப்படமும் வெளியீடு தலைப்பும் :
R K GNANAM
கல்என்று கற்க உதவி டாது...
கல்வியையும் விலைப் பேசுகின்றீர்!
கல்துண்டை மண்ணுள் நட்டு...
கடவுள்விதி என்று ஓதுகின்றீர்!
செல்அரித்த ஓலைக் கதைகள் கேட்டு,
காவடிகள் தூக்குகின்றீர்!
கல் தெய்வமாகி தோன்றி இவன்என் பக்தன்
மரணமே!நில் எனுமோ?
பின்சாவும் தெய்வச்செய லென்றால்;
நாடு எப்படி உருப்படுமோ?
தீட்டுத் தீட்டுத் தீட்டென்றே...
தினம்பு ளம்பும்தீட் டினனே!நீ
தீட்டு ஆகிடும் பெண்ணை பார்த்ததும்...
செக்குமாடு ஆவதேன்?
ஊற்றுள் ஆற்றுள் காக்கை அன்ன
முழுகி [ஓர்நாள் நீயும் பிணமே]
பேதம் ஓதுறீர்!
ஆற்றுள் நாறிடும் மீன்புரள...
போற்றும்நீர்சாதி தீட்டில்லையோ?
No comments:
Post a Comment