Wednesday, 4 November 2015

மீறினராமே சட்டம்... கோவனும்! சிறையுள் இட்டது சரி​யோ?



Embedded image permalink 



தொற்றுநோய் எவரையும் வாய்ப்பிருந்தால் பற்றும் விடாது!
சுற்றுசுக ஆதாரப்பணிகள் அனைத்தும் இயந்திரமாதல் கூடும்!
குற்றமத வெறியேன் கழிவை இழிவை ஒருவன் சகித்ததுபோதும்;
கற்றுபுது தலைமுறை ஒன்றகல்வி முற்றும்இலவசம்என பெறட்டும்!
அப்படியே மருத்துவம் வேலைவாய்ப்புகள் அனைவர்கும் ஆகட்டும்!
சுற்றுவோம் செவ்வாயை ஒருபோதும் நிறுத் திடவும் வேண்டாம்;
சற்றேதோண்டு கோயில்குள செல்வங்களை வெளியிலெடு...
ஒற்றுமைக்கு அரண்கட்டு!எதிர் போரைவிரட்டு;  யாவும் ஆகும்!

பேதங்களுள் புளுத்த சாதியாய்…

நாறிடும் கூவம் ஆறுஉன் -
       நாக்குநாடிடும் மதுச்சாறு!

போரிடும் அறிவுப் புலன்கள் நூறு…
       மனமும், உடலும்கெட... மதிமயக்கி;

தேரேறும்! மதநோய் பரப்பும்!
       சாதி கிருமிகள் தெருதெரு புழுக்க...

சோருதல் அளித்து, படிப்பவனை...
        பள்ளிவிலக தூண்டும்!

சேறினுள் சிக்கிட்ட தி​சைமறந்த படகு; 
        மதுவிற்கும் அரசு!  போதை...

வேர்களுள் இருந்து ஆதாயம் தேட ஆக, 
        வேறுபடும் மக்களை; [சாராய]

தூறுகள் இனஆளுகையி லிருந்து   
        மீட்க பாடிட்டது  தவறோ?

மீறினராமே  சட்டம்!  கோவனும்...
        சிறையுள்! இட்டது சரி​யோ?

No comments:

Post a Comment