Saturday, 3 September 2016

உளி காணா வைரம்... இது! கோயில்சிலை எதற்கு? என்முன் பாடிடுங்க!

Proxy
vishnu vishalAug 29

ஆண்:   

பலநாள் பார்வை பதமாய் கனிந்து;
பதார்த்தம் ஆனதடி-அதைப்
பசியால் உண்ண ஏங்கிட்ட விழிகள்;
இன்றுஏன் திணறுதடி?

பெண்:

பலநாள் தீனி! ஒரேநாளில் விழுங்க;
விழிகள் திணறாதோ?
ஆக்கப்பொ றுத்தவன்நீ ஆறு!
பொறுத்து உண்...
எது ஆனாலும் அவசரம்  கூடாது; 
சீரணம் ஆகிடு...
மே-ஆசை, சீக்கிரத்தில் தீராதே!  

ஆண்:

சுகமாய் ஆசைகள் மனத்துக்குள்...
மகிழ்ந்ததடி! 
வெகுநாள்  சுழன்று கடலாய்...
முயங்கிட;
உணர்வு கள்உள் மயங்குதடி! 
உன்அன்பு... என்
இதயத் துக்குள் சுவாசிக்குதடி!

பெண்:

துளையாய் கனவுக்குள் துளைத்
திட்ட காதல்...
நனவிலும் நிறைவேறி டுதுங்க-
மனத்துள்...

கழலாதபடி இன்பம் சிதையாத--
வாறு நீங்கள்...
நினைத்ததை செய்திடுங்க! உளி
காணா வைரம்...
இது! கோயில்சிலை எதற்கு? 
என்முன் பாடிடுங்க!

No comments:

Post a Comment