Sunday, 19 March 2017

உன்தமிழ் செம்மொழி பண்எழில் பட்டுத் தழுவாமல்...

Ty +frederick misiaszek 

Photo

கற்றுத் தெளிந்தஎன் காதல் மாணவனே - சாதி
முற்றும் துறந்துஉன்னை முத்தமிட மலர்ந்திட்​டேன்!
நற்றமிழ்உன் தாய்கண்ட மருமகள் நானே!
பற்றிஎன் கைதளம் பக்கம்வர மணப்பேனே!

தொட்டுஉன்னை தெரிந்தும் தொலைத்
திட்டேன் நனவுகளில் !

பட்டுஉன் மெய்என்னுள் பரவிமொய்த்
திடும்உறவு கனவுகளில்;

எட்டுத் திக்கும் சிதறிட்டேன்; பாசம்...
ஏங்கிடுதே பிரிவுதுயரில்!

சிட்டுக் குருவிஆ கிட்டேன் உன்தமிழ்...
செம்மொழி பண்எழில்;

பட்டுத்தழு வாமல்ஒளி வருடல் பயற்சி
செய்திடுமோ? நிலவைநீ எட்டு!

View more:  அழியா அன்பு வரைப்படமே! மடங்காபூ 
                      இதழ்களுள்...
Photo

No comments:

Post a Comment