Sunday, 7 April 2019

நஞ்சதனை உண்டு அன்று...


Photo

நஞ்சதனை உண்டுஓர்நாள்...
நன்நிலம்  காத்தயாம்!

பிஞ்சுநிலா சூடிஅதில் பேருவகை
கொண்டாயாம்!

உண்மைஎன்றால்  தெய்வமே வா!
ஒன்றிடாச் சாதிகளுள்;

முன்னேறா பேதம்ஓதும்
முட்டாள் அடிமைகளுள்;

மக்கே!நிமிர் நோக்கு; சாதிஉடை! நீஎன்...
காதல் காவல் சிவ-லிங்கன்!
புண்படுவோர் மாறமதம் போற்று!

இன்ன இன்ன நூல்அ ணிந்தான்
இன்ன இன்ன சாதி! - பேதம்
பின்ன லிட்ட பிரிவு கட்குபெயர்...
வருணம்! பார்பானின் நான்கு-
எண்ணு கைக்குள்  இல்லான்...

பஞ்சமனாம்! பூனூல் அணியா- 
மண்ணின் மைந்தன் தலித்தாம்!
தலித்து கட்குஎன்ன வண்ணம்?
சாதி,பேதம் நிறமறியா குணம்!

கொக்கொக் கொக்-சேவல் பறக்க!
எக்கி  திக்கு எட்டும் கோழி தப்பிக்க!
திக்கி முடிவில் சிக்க தரையில்ப--
டுக்க! தர்க்கம்கு தர்க்கம்எ தற்கு?

கற்க... கசடற... தலித்சேவல் காதலில்...
நிற்க! சிவக்க வெட்கம் அக்க எனக்கு!
அக்கம்பக்கம் நோக்காதே சொக்கன்தி...
கைக்க  சொக்கி என்னை-நீ செதுக்கு!

No comments:

Post a Comment