Sunday, 29 October 2023

என் - கவிதைப் பிரளயமே!

Verses for Taylor [Venba styles]

வெய்யில் தொட வேகாமல் சுடுகின்ற

ஓடாகின்றேன்! - என்றன்

மையல் படநீ மகிழ்ந்து படிகாதல்

ஏடாகின்றேன்! - இந்தத்

தையல் குளியல்செய்ய தலையாட்டும் மந்தை

ஆடாகின்றேன்! - நீ

நெய்யை வீணாக, ஓதுவோன்அன்ன நாளும்

நெருப்பிலிடாது  - உன்அன்பில்

கையில்ஒன்ற நான் வேற்றுமை அவிழ்க்கும்

நாடா ஆகிடுவேன்!

 

 

வானுள் ஒளிர்ந்து வளர்ந்துவிண் நோக்கிடினும்,               
தேனே அருந்தஏங்கும் திங்களே!என், நாணும்
அமிழ்தே! எனக்காக ஆழ்ந்து பணிசெய்;
தமிழ்சங்க மாய்நான் தளிர!

 

திறக்கும் உதடுகளுள் திகைக்கும் இனிப்பே?

தெரிக்கும் மதுஉண்டு சிலிர்க்கும் மலரே?

விரிக்க இமைகள் விழிசிமிட்டும் அழைப்பே?                                                 

சரிக்கும் நிகழ்வில் சரித்திரத் தொடர்கள் நீயே!

 

திமிரக் கவிழ்வேன் திகைக்க சுழல்வேன்!

நிமிர மலர்வேன் நீநீந்த  அமிழ்வேன்!

அமிழ்த சுனையுள்உன் ஆசைகள் முகிழ...

உமிழ்ந்தால் அதிலும் உருள்வேன் காதலா!

 

தேடித் தேடி என்னைநீ தீண்டிடேன் இரவெல்லாம்;

ஆடிநானும் மகிழ்விப்பேன்உன் ஆசை அசையும் வழியிலே!

ஊடிடாத படிஎன்னை நீநாளும் ஓடிவந்து கூடினால்,

வாடிடு மோநிலவு வானுள்ளே? கனியுமே முகிழ் மாரியே!

 

மாரியோடு மயில்களும் மயங்கிட ஆடும் முகில்களாய்

சாரலோடு இடிஇறங்கிட தாவிமறையும் மின்னலே!பால்

சோறுஊட்டி  மழலையை தூங்கச்செய்யும் தாயெனஉன்

துாரியா​​வேன் உனக்குநான் தூதுவிடவா அழகுநிலவையே?

 

ஏடுதொட்டு கவிதைப்பாடி என்னுள்இசைக்கும் காதலா!கண்

சாடைகண்டு  என்னைநீ சரிப்படுத்திட வேண்டுமே!

ஊடல்காட்டி  சிறுமியோ? ஒருக்களித்துப் படுக்கநீ

ஆடிட்டது என்றன் அங்கமே! அகன்றிட்டது உறக்கமே!

 

அண்டுநீ அண்டுஎன்றே அசையும் கொடிமலர் ஓர்கருத்த      

வண்டை நோக்கி  மயங்கிதன் இதழ்களை விரிக்கஅதை

கண்டு இமைஅசைத்து என்னுள் காதலி முகிழ்என்று

சுண்டியிழுத்  திடுதேஏன்  தூதுவிட்டஎன்  பார்வையே!

 

விண்ணும் நிலவுமென மின்னும்இடிமாரி அன்ன

கண்ணும் கலந்து விடஇக் கவிதைக் காரிகைதொட

அண்டும் தினவுகளும் அழைக்கும்உன் உணர்வுகளும்

முன்னும்இப் பெண்இமைகள் பின்னும் தான்உறங்குமே!

 

காதலிநான் உனக்குத்தான் என்றாய் காதலித்தேன் அதனால்!

காதலொடு நாவற் கனிவிழியாளை நீமட்டும் நேசிக்கும்

காதலியாய் ஆகினேன் காமுகனாய் என்னைவிலகி வேறு

மாதுஎவளைப் பார்ப்பாய் என்னுள்நீ மயங்கு நாளுமே!


நாணம் தடுத்திட்டாலும் நடுவில்உன் நினைவில்
பூத்திட்ட வஞ்சிநான் - பள்ளி
காணவும்உன் கவிதைஏடென நீபடிக்க...
மெளனமாய் கேட்கவும் மகிழ்ந்திடும் காதலிநான்

வானுள் ஒளிர்ந்து வளர்ந்துபுவி நோக்கிடினும்
தேனுள் சுவையறியா திங்களே!என் - நாணும்
மிழ்தே! எனக்காக ஆழ்ந்துபணி ஆற்று;
தமிழ்சங்க மேகேள்... தருவேன்!

 

அரவாய்நீ சீறிடினும் ஆசைவிழி மூடி... நான்

மருளும்பொன் மான்தான் மாலைவர என்னுள்;

புரண்டொதுங்க நாணம் புனிததளம் காண்பாய்!

சுரண்டுவாஉன் சொர்க்கம் திறக்கும்!              

 

அள்ளி குழல்ஒதுக்கி அதிசயமாய் உன்னைஎன்றன்

மெல்லியப் பூங்கரத்தால் மேனியை மாலையாக்கி

முல்லைச் சரவாயால் முத்தமிடும் போதுமொட்டு

மல்லிகைக்குள் துள்ளும் மணம்!

 

பின்னிடும் புன்னகைப் பின்னலில் உன்னிரு

கண்களும் தூண்டிட, கண்டிட்ட போதையால்;

என்னுள் மகிழ்ச்சி இதயத்துள் குதிக்கஇந்த,

தண்நிலவு தான்தாவும் உன்மேல்!

 

Verses for Taylor Swift.doc

 

Verses for Taylor Swift (2) (1).doc

 

Verses for Taylor Swift (2) (2).doc

 

Verses for Taylor Swift [III].doc

 

Verses for Taylor Swift [III] (3).doc

 

 

 

 

 


                   (1)
என் -
கவிதைப் பிரளயமே!

ஒளியின் வேகமோ...
நிமிடத்திற்கு,
ஒரு லட்சத்து
எண்பத் தாராயிரத்து
இருநூற்று
எண்பத்து ரெண்டு
புள்ளி
முன்னூற்று
தொன்னூற்றேழு
(1,86,282.397)
மைல்களாம்!

அம்ம...!
என்னை ஊடுருவி
நோக்கும் உன்றன்
பார்வையின்
பாய்ச்சலோ –
பாய்ச்சலின் வேகமோ...
அது, அறிவியல் –
ஒளிவேகக்
கருவி கொண்டும்,
அளந்து...
நிர்ணயிக்க இயலாது!

ஒரு அனுமானமே!
பல நூறாயிரம்
ஒளி ஆண்டுகள்!
(ஒரு ஒளி ஆண்டு
பல நூறாயிரம் - 5.88
மில்லியன் மில்லியன்
மைல்களாம்???)

என் –
காதல் புவனமே!

உலகம்...
உருண்டையானதுதான்
உன்னை –
சந்தித்த பிறகே...
அதில் எனக்கு
நம்பிக்கை வந்தது!
நானும்... நிலா ஆனேன்!

நீயோ...
பூமியாகவே மாறி
என்னை –
சுழலச் செய்கிறாய்!
உன்னை –
சுழற்றி மகிழ்கின்றாய்!

என் -
சுழலும் பூமியின்,
ஓசோன் படலமே!

இங்கே –
ஏப்ரல்-மே சூரியனின்... அல்ட்ராவயலட்
பூமி உயிர்களை,
பயிர்களை, வயல்களை,
சுற்றி எரிக்கும்
முனைப்பில்...
எரிமலை
ஆறுபோல்பாய...

நீயோ –
உன் உலகமாக
என்னைக்
காப்பாற்ற முற்படாமல்,
காற்று மண்டலத்தைத்
தொற்றிக்கொண்டு...
அங்கிருந்து
நோக்குகின்றாயே!

கார்பண்டை
ஆக்சைடே போல் –
பாரத, பேத மனநோய்
நம்மைப் பிரித்து
ஒன்றலுக்கு தடையாய்
ஊறு செய்கின்றதோ?

அங்கமே!

தென்றல், வரும் திசை...
எதுவென்று
தெரிவிக்கும்
ஆனமோ மீட்டர்...

உன் கண்கள்
என்னைத் தீண்ட
தொடும் திக்கை
அறிவிக்க வேண்டுமே!

காற்றின் அழுத்தத்தை
கணக்கிடும்
பாரோ மீட்டரும்
ஆவல் கொள்ளும்
உன்
நெருக்கத்தின்
இருக்கத்தை
நான் அளந்தறிய
உதவுமோ?

இயற்கைச் சூழலின்
வெப்பத்தின் தன்மையை வெளிப்படுத்தும்
கலோரி மீட்டர்...
உன் கோப, தாப
அனலை
கணிக்க, தணிக்க
பயன்படுமோ?

வளையா வானமே!

வானவில் –
வயலட்
இண்டிகோ
நீலம் பச்சை
மஞ்சள்
ஆரஞ்சு
சிவப்பு - என்று
ஏழு நிறங்களையும் –
தன்னுள்
கொண்டுள்ளது!


என்றாலும்...
தயக்கம் விலகி
பூமியை வணங்கி
இணைகின்றது!

கார்முகிலே!

நான் –
வர்ணதாசன் அல்ல!
நீ மழையைப் பொழிய...
தோன்ற!
         (2)

      பொழியாத போது,
      பச்சோந்தியே போல்...
      இல்லாமல் மறைய!

      மேகமே!

      உனக்கு –
      நானே 'சிரபுஞ்சி'!
      என்னை விட்டு
      விலகாதே

உலகில்
அதிக அளவில்,
மழைப் பெய்யும் பகுதி –
இனி...
'சிரபுஞ்சி' அல்ல!

என் பெயர்தான்...
கின்னசில் –
இடம்பெற வேண்டும்!
உன் மழையை -
என் இதயத்தில்...
தாராளமாய்...
பொழிவி!

என் முகம் நோக்கும் –
விண்ணிலவே!

கதிரவன்
தன் வட்டப்பாதைக்குள்
நொடி ஒன்றுக்கு
இருநூற்று அய்ம்பது
கிலோ மீட்டர்
வேகத்தில்
சுழல்கின்றானாம்!

முழுமதியாய்
உன்னை காணும்
இரவெல்லாம்
எத்தனை மைல்கள்
வேகமென்று
தெரியாமலே...
என்னை நானும்
சுழற்றுகின்றேனே!

என் கவிதைச்
சுரங்கமே!

மேகங்களின் -
மோதல்களில்
மின்னல் விரிந்தது!
உன் விழிகளின்
தேடல்களில்
என் சன்னல் திறந்தது!

நிலவின் ஒளியே!
மின்னலுக்குள்
உள்ளதாம் மின்சாரம்!
உன்னில் இருந்தோ…
விண் சாரமே...
உணரப்படுகின்றதே!

பிரபஞ்ச...
கரு மையமே!

மின்னற்
கொடியேபோல்…
நீ வெடிக்க
பரவலாய் தெரித்த
ஒளித் துகல்கள்
வானின் –
நட்சத்திரங்கள்...
காதலில் என்னை
அருகில் வா என்று
கண் சொடுக்கும்
தாரகைகள்!

என் நினைவுப்
பிரவாகமே!

விண்வெளியில்
மட்டுமா...
ஒளியாறு!
என்னை நீ நோக்க
உன்விழி –
மொழியினின்றும்
பாய்கின்றதே...
என் உயிர்ஆறு!

புன்னகைக்கும் –
வெள்ளை நிலாவே!

அண்டத்துள்
உள்ளதாம்
பால்வெளி (வீதி)!
நான் கண்டதோ...
அதை,
உன்னிடமே!

அது என்ன
கருப்பு வளையம்
(பிளாக் ஹோல்)!?
பிரபஞ்சம்
முமுமையும்
அதனால் இழுக்கப்
படுகின்றனவே!
நானும் -
உன்வசமாய்
ஈர்க்கப் படுகின்றேனே!

ஆச்சரியமே!

உன் விழியீர்ப்பு
விசையை அறிய...
கிரகங்களின்
ஈர்ப்பை அளக்கும்
நியூட்டனின் தத்துவம்
உதவாமல் போயிற்றே!

ஆனால் கிரகங்கள்
போன்றே...
ஈர்பபும் தாவலும்
ஒருங்கே
உன்னிடத்தில்...
எப்படி?

பிரபஞ்ச மையமே!

சூரிய
குடும்பமே போல்...
நானும் –
உன்னை விட்டு...

முப்பத்து மூன்றாயிரம்
ஒளி ஆண்டுகள்
தொலை தூரத்தில்...
விலகி –
ஒரு மூலையில் –




                 (3)

மின்மினிப் பூச்சிபோல்
சுற்றுவதாய்
உணர்கின்றேனே!
எனக்கும் உனக்கும்
எதற்கோ...
இந்த இடைவெளி!.

அழகு வீணசே!

நீ...
கந்தக அமிழத்தை –
மழையாய்
பொழியாதே!

அமிலம் பட்டு
நம் காதல் கொடி
கருகிவிடக் கூடாதே!

சூரிய(ன்) குடும்பத்து 'ப்ளூட்டோ'வே!

என்னைத்...
தொலைவில்
கடைசியாய்
வைத்து
தனிமையில்
சுழல...
விடாதே!

சூரியன்...
ஹைடிரஜனை,
பிரதானமாக
கொண்டு,
எரிந்தழிகின்ற...
அகில
மெழுகுவர்த்தி!

என் நினைவுகளோ...
உன்னையே –
ஆதாரமாகக்
கொண்டொளிரும்,
வளரும்...
காதல்வர்த்தி!

அணங்கே!

சூரிய குடும்பத்தில்
கோள்கள் மொத்தம்ஒன்பதாம்!

நாமோ...
காதல் பாதைக்குள்
இணைந்த
பிறகே...
அதைப்பற்றி
முடிவுசெய்ய
வேண்டும்!

என் காதல்
பூந் தோட்டமே!

தமிழ்நாட்டில்...
வானிலை –
ஆய்வு மைய்யங்கள் –
ஏழு இடங்களில்...

சென்னை,
கோயம்புத்தூர்,
உதகமண்டலம்,
கொடைக்கானல்,
திருச்சி, சேலம்,
மதுரை... என்று
உள்ளனவாம்!

உன், இக் –
காணான் தேச –
கவிதைகளை
நீ ஆயும்...
ஒரே மையம் –
உனக்கே தெரியும்!
அது... எங்கே என்று!

என் காதல் –
ஆய்வு மையமே!

சோலார்
நெப்யூலாவோ...
வாயு அடர்த்தியுடன்
சுழலும் தூசித் தட்டு!

நீயோ -
என்னைத்
தென்றலுடன்
சூழ்ந்திட்ட...
மணமோடு, சுகமான –
மல்லிகை மொட்டு!

காதல்
அரங்கேற்றமே!

தாரகை
ஒளிக்கற்றைகள்
பல தூசு
அடுக்குகளை
வாயுப் படலங்களை
தாண்டி
வெளிப்படுவதால்
விட்டு விட்டு
மின்னுதலைச்
செய்கின்றனவாம்!

நம் கனவு ஒளிக்...
குவியலோ...
இந்திய
பேத மாசுகளை
ஊடுருவி ஒதுக்கி...
ஒற்றுமைத் தெளிவில்
தூய்மையில் உயர்ந்து –
மறையாமல்
ஒளிர்கின்றது!

என் தாக தேசமே!

பூமியில் மட்டுமன்று
வியாழனிலும்
தண்ணீர் காற்று
உண்டு என்று
தனியே இங்கே,
என்னை விட்டு
விலகிச் செல்லாதே!

என்றாவது ஓர்நாள்
கங்கை
காவிரியோடு,
இணைந்து
 உறவாடும்...
குமரிக் கடலுக்குள்,
நீந்தி மகிழும்!
https://buc.kim/d/4O4s1SSXp8Te

No comments:

Post a Comment