Monday, 31 December 2012

மரணமடைந்த டெல்லி மாணவிக்கு…

 All Job Advices Sites

                                                                                                                                                                                                                             
சாதிமதம் விலகு அழியுமே, பெண்ணடிமைக் களமே!

கழுதைப் பொதிசுமக்கும்; காண்(கின்ற) இராப்பகற்
பொழுதைப் புவிசுமக்கும்; நிழல்தரும் ஆலம் -

விழுதை மண்சுமக்கும்; விழிப்புணர்வு இல்லாதோர்-பற்
பழுதை எகிற்சுமக்கும்; பாவையுள் ஆணும்முயங்க, கண்ணீருள்
முழுகி... பெண்மட்டும் வாழ்நாள் முழுதும்துயர்! சுமப்பதோ?

தலைவிதி எழுத்து சொல்லும் பொய் தெய்வத்தால் அல்ல;
பிழையாய் மானுடத்தை பிரித்தொடுக்கும் கற்பனை மணற்கயிரே!
அழியுமே, சாதிமதம் விலகு, ஆணாதிக்க பெண்ணடிமைத் தளமே!

 

மரணமடைந்த டெல்லி மாணவிக்குஆழ்ந்த இரங்கலையும்
அவரதுகுடுமத்தினருக்கும்உறவினர்கட்கும்பெரும்துயரத்துடன்
ஆறுதலையும்ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொண்டிட்ட
போராளிகட்கு முழுமையான ஆதரவையும் -- 
 
கவிதைச்சிட்டு தெரிவிக்கின்றது!


காம மிருகங்களே!




கடவுள் இல்லவே இல்லை...
இதை நிரூபிக்க...
உங்களுக்கு வேறு -
அறிவு வழியே... தென்பட வில்லையோ?


கொடூரமானவர்களே!
குற்றுயிராய் மயங்கிட்ட
அந்தப் பெண்
இந்திய நாட்டவள் என்பதால் -
உங்களின்... இன்னொரு சகோதரியே!

ஆண்டவா!
நீ,  இருப்பதாக
போற்றப்படுவது,
அனைத்து உயிர்களையும்
நீயே படைத்ததாக...
நம்பப்படுவது,
பொய்யல்ல என்றால்...
மகளிர் மீது -
வேதனைகள் தொடரலாமோ?

நின் கண்முன்,
ஆறு வெறிபிடித்த ஓநாய்கள்...
ஒன்றன்பின் ஒன்றாய்
மானுட நாகரிக,
உடலுறவு ஒழுக்கத்தை
அருவறுப்பாக்க...
டில்லியில் ஒரு புறா
சிதைந்து புதைந்ததே!


தென்
மாநிலங்களிலும்
இந்நிலைமை...
தொடர்கின்றனவே!
 பெண்மையே வரும் தலைமுறை வேர்அம்மா!


அவள்:     பெண்னின் பிறப்பும் தேவையா? - அவள்
                   பிறந்திட துன்பம் தானம்மா 

தோழி:    பெண்ணேவரும் தலைமுறை வேர்அம்மா!
    பெண்மையே, உலகுக்கு உயிர்ப்பின் கரு அம்மா!

                                                                                [தொடர்ச்சியைக் காட்டு]
                                                                       
                                                                                                                                                                                                                                       
Show large loving, to your parents;
As such wishes on your wife;
Learn good characters,
For children and country;

           Aim to remove...
           The difference among nations;
           Plan your thoughts, for uniting people;
 
And grant you yourself,
For Mother Tongue’s growing!
                                                                               [Next]





No comments:

Post a Comment