Wednesday, 4 February 2015

சாதிஓதும் வேற்றுமையே! சமயமனோ வியாதிகளே!

 
   Photo :   Ishitha Iyer

அஞ்சி அஞ்சி அஞ்சியே அடிமையான மானுடமே!
நஞ்சும் அஞ்சும் நஞ்சடா நைந்த பேத நோயடா!
தஞ்சமாகி மதசாதி யுள்தன்  மானம்விட்ட மூடரே!
மிஞ்சு மிஞ்சு மிஞ்சவே மிரண்டழியும் வருணமே!

சாதிஓதும் வேற்றுமையே! சமயமனோ வியாதிகளே!
சாவு வந்துற எவனுக்கும் பிறப்பு இல்லையே!

ஆதிக் குரங்குகள்தாம் மானுடம் ஆயிற்றே!  
அற்ப  நேரத்திற்குள் சுவாசம் நின்றிடுமே!

ஏதுகடவுளே! எதற்கு மதங்களே! மரணம் 
ஏகவே  பொம்மை இறைவனாகி தடுத்திடுமோ? 

போதிபுத்தன் அன்ன மதிமானுட நாகரிகமே!
 புதைபேத ஓதல்களை; அன்பிலேநாம் ஒன்றவே!

No comments:

Post a Comment