Photo: Galang Ratanacorn
என் நினைவுப் பிரவாகமே!
மேகங்களின் மோதல்களில்
மின்னல் விரிந்தது!
உன் விழிகளின் தேடல்களில்
சன்னல் திறந்தது!
இரவு நிலவின் உறவு ஒளியே!
மின்னலுக்குள் உள்ளதாம்
மின்சாரம்!
உன்னில் இருந்தோ…
விண் சாரமே உணரப்படுகின்றதே!
என் கவிதைச் சுரங்கமே!
விண்வெளியில் மட்டுமா...
ஒளியாறு?
என்னை நீ ஊடுருவி நோக்க...
உன்விழி மொழியினின்றும்;
பாய்கின்றதே...
காதல் உயிர்ஆறு!
என் நினைவுப் பிரவாகமே!
மேகங்களின் மோதல்களில்
மின்னல் விரிந்தது!
உன் விழிகளின் தேடல்களில்
சன்னல் திறந்தது!
இரவு நிலவின் உறவு ஒளியே!
மின்னலுக்குள் உள்ளதாம்
மின்சாரம்!
உன்னில் இருந்தோ…
விண் சாரமே உணரப்படுகின்றதே!
என் கவிதைச் சுரங்கமே!
விண்வெளியில் மட்டுமா...
ஒளியாறு?
என்னை நீ ஊடுருவி நோக்க...
உன்விழி மொழியினின்றும்;
பாய்கின்றதே...
காதல் உயிர்ஆறு!
No comments:
Post a Comment