Saturday, 14 March 2015

குழந்தை பிறக்க குளம்கோயில் சுற்றல்வீண்...



  Photo:  Carmilita Zotomayor-Riveral


குழந்தை பிறக்க குளம்கோயில் சுற்றல்வீண்
மழலை மருத்துவத்தால் கூடும்!

ஆறறிவால் யாவும் அணுகிடும் தன்மையால்
வேறுநாட்டில் கூறுசாதி வேர்இல்
.

சந்திரன் சீவன் சிரசிலில்லை நீல்ஆம்ஸ்ட்ராங்
விண்நிலவுள் கால்களை வைத்தார்!

வருணன் கடவுளோ? வான்ஞான ஆய்வால்
வரவழைத்தார் மேலைநாட்டார் மாரி!

மழைஓர் இறைவனேஇல்! மாறாது பூமி;
குளிர்வுறபெய் விப்பார்விண் ஞானி!

தீயும்ஓர் தெய்வமோஎத் தீயும் அணைந்திடும்
தீயணைகும் நீர்இயந் திரம்!


சிவன்ஓர் தெய்வமதான் என்றால்
பிறைநிலாவில் கால்களைப் பதித்து
அவமதிப்பானோ மனிதன்!- அட
இறங்கிட்டதே மானுடம் நிலவில்!
                                                            சிவனது சிரசுள் வீற்றிருப்பதாய் ஓதும்
பிறைமேல் கால் பதித்தும் பூமிக்கு

திரும்பி வந்திட்டானே ஒருவன்!

 



                                                           
 

No comments:

Post a Comment