Monday, 16 March 2015

ஆப்பதனை அசைத்திட்ட குரங்கெனவே, என்நிலைமை என்னை...



  Photo:  Waley Lin




உன்விழிகள் முழுவதுமாய் ஈர்த்திட்டன!!
என்றன் நினைவுகள் காதல்
உணர்வுகளைக் கோர்த்திட்டன!

உன்னைப் பார்த்ததுமே என் மனமோ
கவிதை முத்துக்களாக சேகரித்து
கற்பனை மாலை செய்து மகிழ்கின்றது!

துன்பமோ? இல்லை இன்பமோ? காதல்
உன்னை ஆய்வதற்கு தினம் வாடுது!
உன்றன்மனம் அறிவதற்குத் திண்டாடுது!

ஆப்பதனை அசைத்திட்ட குரங்கெனவே,
என்நிலைமை என்னை உரு மா
ற்றிட்டது!
உன்னால் உறக்கம் என்னை கைவிட்டது!

எனக்காகநீ அன்று உன்னுள் உருகினாய்
உனக்காக என்விழிகள்
இன்று கண்ணீர் பெருகின!


உன்னைச் சேரும் நாளை எண்ணி
தினமும் தவிக்கின்றேன்! - நெருப்பாய்
தீய ஒவ்வோர் நாளும் என்வாழ்வும் கருகிற்றே!

சாலை நடைபாதையில்
மானுடம் ஓரமாய் சென்றாலும்
பாரம் சுமந்தவண்டி நடைபாதையிலும்
புகுந்து கவிழ்வதுண்டு!

என்னைநீ விலகி,
வெகுதூரம் போனதினால்;
உன்னை நினைத்து தினம்...
பாதை மாறிய வண்டி ஆகிவிட்டேன்!

திங்களே உன்னைப்போல் நானும்,
ஏங்கித் தேய்கின்றேன்!
உன்னுள்நான் தங்கவே
என்னுள் நான் சுழல்கின்றேன்!

ஒளி மங்கினால் உனக்கோ அமாவாசை!
என்வாழ்வும் அமாவாசைதான்
மாதத்தில முப்பது நாளும்
இருட்டுள்நான் புதையலாமோ?

No comments:

Post a Comment