Photo : Swiftie Edits
முயல் தினமும் முயற்சிக்கும் தூய...
செயலுக்குள் ஏதும் இயலும்!
கிள்ளிடுவேன்! மெல்லஉன்னை...
அள்ளிடுவேன்! முகர்ந்திடுவேன்!
தள்ளிடாதே! இக்கொடிப்பூ 'பூ' விலகி;
பல்லிஅல்ல தாவிடாதே! வான்நோக்கி;
நீ,என்கைப் பூ ஆகிடு; தவறுதல் இராது [உன்றன்]
பா ஆகிடுவேன்; சூடிடுவேன்!நீ என்நா...
பாஆக, நானும் தமிழ்அன்ன மாறிடுவேன்!
பூவைக் கும்அழகுப் பூவைமுன்...
'பா'வை; பாவைக்குள்... 'பூ'பூக்கும்!
தேன்மின்னும் இதழ்கள்உன் தமிழ்சுவைக்க;
கனக்கும் காதல்தனம், ஆநந்த வனம்தினம் ...
மணக்கும்; சுரக்கும்; இனிக்கும்!
கயல் நீந்திடும் கடலுக்குள்;
மயில் ஆடிடும் சோலைக்குள்;
தைஇவள் பாடிடும் அரங்குக்குள் வருவோருள்...
அயல் என்று எவரும் இல்லை; அகிலத்துள்!
No comments:
Post a Comment