Sunday, 22 March 2015

சீர் சிறப்பு கேட்கும் திருமணமோ மலைஅளவு விலையிலே!


 
  





அ​லையடிக்கின்றது கடலி​லே! ஆசை 
சிலுசிலுக்கின்றது உள்ளத்துள்ளே!
காத​லோடு ​செல்வதற்கு – நம்
கல்யாணம் என்ற படகி​லே,
உடன் வருவதற்குநீ இல்​லை!

ஒ​ரே நிறம் மதம் ​கிணற்றுள்​ளே...
மாப்பிள்​ளை​யை வாங்க த​டையில்​லை!
சீர்சிறப்பு ​செய்திடும் ​பெண்வீட்டாருக்கு
திருமண​மோ ம​லையளவு வி​லையி​லே!

வயதுஏறிடும் கொந்தளிப்பில் வாடிடுது;
பருவசுகம் தினம் நெருப்பிலே!
அழகிருக்கின்றது எல்லா நி​லையி​லும் (இருந்தும்) 
கல்யாண கனவு சு​னையுள்​ளே...
குற்றாலத்தில் குளிக்கப் பணமில்​லை!

சுரண்டப்படும் ​பெண்ணடி​மை வன்கொடுமை,
இருண்ட காலம் இன்னும் விலகலே!
பேதவிலங்​கொடித்து விடுத​லைப் ​​பெற்று;
கதிரவன் உலகம் காண... விடியு​மே!
 

 

No comments:

Post a Comment