படம் : Thanthi TV
பொய்யை கடவுளாக்கி புராண இதிகாசங்களாக்கி,
நெய்யை (தி)யாகம் செய்திடுவதாய் நெருப்புள் கருக்கி;
செய்யும் போலிசாதி செய்தி பேதங்களை மதமாக்கிட்ட,
அய்யங்கள் இந்துஎன்றால், யாவும்ஆய்வுகட்கே தெளி!
முன்னால் அன்னியர்களான பேத வம்சத்தவர்கள் இராதவனை சூரிய வம்சத்தவர் என்பதாக மக்களிடையே பரப்பிட்ட வதந்தி ஓர் ஊழல்!
இதனால் பாண்டவர்களின் தாய் சூரிய வம்ச வாலிபன் ஒருவனோடு
ஏற்பட்ட தொடர்பால் கர்ணனை பெற்றாள் என்பதால் கர்ணனை பாண்டவர்கள் தங்களின் சகோதரனாக எண்ணாததோடு
பிறவிப் பகைவனாகவே அவனை இறந்துபடும் நாள் முடியவும்
ஒதுக்கியே வைக்கவும் அழிக்கவும் முற்பட்டனர் என்கின்ற
தகவலானது மறைந்துற்றது!
சூரியனுக்கு (சூரிவ வம்சத்தில்)
பிறந்திட்ட அடிப்படையால் கர்ணன்
அன்று ஆரியர்களால் தீண்டத்தகாதவனாகப் பார்க்கப்பட்டான்
என்பதில் இருந்து ஆரியர்கள் சூரிய (சூரியனை போற்றிட்ட)
வம்சத்தவாகள் அல்ல என்பதானது சூரிய ஒளிஅன்ன பிரகாசிக்
கின்றது,
சூரிய உதய இனன் என்பதானது சூரிய உதயனன் என்றாகி
அதுவே சூரியோதனன் என்பதும் சூரியோதயைம் என்பதும்போல்
துரியோதனன் என்றாயிற்று.
இதிலிருந்து நாம் அறிந்திட வேண்டிய
தகவல் என்பதானது துரியோதனன் சூரிய வம்சத்தவனே என்கின்ற
அடிப்படையால் அவன் ஆரியர்களால் பெரிதும் தூற்றப்பட்ட
கர்ணனை தன்னுடைய அன்புக்கு பாத்திரமான சகோதரனாக மட்டுமல்ல
நண்பனாகவும் போற்றிட்டான்
பின்னாளில் தனிஓர் நாட்டுக்கு அதிபதி
(மன்னன்) ஆக்கிட்டான்.
தவிர, ஆரியன்
என்பதற்கான எதிர்பதமான தமிழ்சொல் சூரியன்
என்பதாகும்!
[ஆதாரம்: ஆறு என்பதற்கு ஆறு(ம்)
நிலை அடை (அதாவது
சூடு தணி)என்று பொருள் அறியப்படுகிறது. ஆறு என்பதற்கு
'அமைதியாகு' என்று நேரடியாக பொருள் கொள்ளலாம்.
ஆறு(வது)
என்பதானதுஆறி(னது)
என்று மாறிடுவதுபோல்
ஆறியம் ஆரியம் ஆயிற்று, ஆரியம் என்றால் கேள்வரகு.
ஆறு என்பது ஆரி என்றாயிற்று.
ஆறியன் பின்னாளில் ஆரியன்
ஆகினான்.
ஆறியன் என்றால் சூடு தணிந்திட்டவன். இதற்கு
இயல்பான (இயற்கைச் சூழல் அடிப்படையில்)
பொருள் யாதென்
றால் குளிச்சியான சூழ்நிலைகளைப் பெற்றவன் (அதாவது
ஆறுகளை ஒட்டி கரையோரங்கள் மற்றும் பள்ளத்தாக்குகளில்
வாழ்ந்திட்டவன்)
சூரி என்றால கூர்மையுடைய சிறு கத்தி (அதாவது
குறுவாள்)
சூரியன் என்றால் கூர்மையான சிறு கத்தியை (குறுவாளை)
எப்போதும் தன்உடமையாக வைத்துக்கொள்ளும் அதிகாரம்
பெற்றவன. அந்தப்படிக்கு சூரியன் என்றால் வீரமுடையவன்
என்றுப் பொருள் தெளிவுப் பெற்றிடலாம்.
ஆரியன் தன்
முழுமுதற் கடவுளாக வணங்கிட்டது அக்கினி என்றான நெருப்பையே! காடுகளின் ஊடே கைபர் போலன் கணவாய்கள் வழியே ஆரியனுக்கு அணையா நெருப்பானது தேவையின்பாற்பட்டதாக இருந்துற்றது, இந்நிலைமையால் ஆமணக்கு எண்ணெய் பற்றி அறிந்திருக்க ஆரியனுக்கு ஓரிடத்தில் நிலையாக இருந்துபயிர் செய்திடும் வாய்ப்பு அப்போது அடையப்பெறாத நிலைமையால் தன்னோடு ஓட்டிக்கொண்டு வந்த கால்நடைகளின் கொழுப்பை எரிப்பொருளாகப் பயன்படுத்திட்டான் அந்தப்படிக்கு நிலைமைக்குள்ளான அவனின் முன்னோர்களின்
நடைமுறை அடையாளமாக இன்று நெய்யை நாடெங்கிலும்
குடம்குடமாக வீணடித்து எரிநெருப்பை வளரவிடுகிறான்.
ஆனால்
ஆரியன் அல்லாதவர்களான பஞ்சமாகள் மற்றும் தாழ்த்தப்
பட்டவர்கள் என்று இன்று பெயரிடப்பட்ட நாகர்கள் (ஆதித் தமிழர்கள்) மற்றும் இன்று திராவிடர்களாக (பிற்படுத்தப் பட்டவர்கள்)
பிளவுப் பட்டுள்ள தமிழ் மூதாதையர்களின் முன்னோடிகள் (அவர்களும் நாகர்கள்தான்)
தங்களின் முதன்மைத் தொழிலாக மதித்திட்ட விவசாயத்திற்கும் பெருமளவுக்கு மழையை பெய்திடாமல் தடுத்திடும்
ஆற்றலுக்கும் சூரியோதையத்தையே
நம்பிட்ட அடிப்படையில் முதலாம் அன்னியாகளின் வருகைக்கு முன்பே சூரியனையே தங்களின் பிரதான கடவுளாக வணங்கிட்டனர்.
மேலே காணுகிறபடி அளிக்கப்பட்டுளள தகவல்களால் பார்பனர்கள்
எவரும் சூரிய வம்சத்தவர்கள் (அதவது சூரிய அம்சத்தவர்) அல்ல என்பதானது முறையே அறியப்படுகிறது.
மைலாப்பூரில் வாழ்கின்ற முன்னேறிய இந்து வியாசர்பாடியில் பிழைக்கின்ற இந்து ஏழைகளை முன்னேற்ற கோயில்களில் முடங்கிக் கிடக்கின்றசெல்வக் குப்பைகளை வெளியிலெடுக்க ஏன் போராடக் கூடாது?
கோயில்களுள் நுழைய போராட்டம் நடத்திட்டால்
இந்துத் தாழ்த்தப்பட்டவர்கள்
அர்சகர்கள் ஆகி
விடுவார்களா?
தமிழகத்தைப்
பொருத்தவரை கோயில் நுழைவு மட்டுமே
கொள்கையாகி விடுமானால் தாழ்த்தப்பட்டடவர்கள் அர்சகர்கள் ஆகிட வேண்டும் என்கின்ற எண்ணம்
வலு இழந்துவிடக் கூடும்; தவிர தாழ்த்தப்பட்டவர்கள் அர்சகர்கள் ஆகிடும்
சூழ்நிலை அடிப்படையில் கோயில்களுக்குள் செல்ல அனுமதி கிடையாது
என்கின்ற தடையானது உடன்நிகழ்வாக வலிய
செயலற்றதாகிவிடுகிறது; இந்நிலைமையில் கோயில் களுக்குள் நுழைய போராட்டம் அவசியமற்றதாகி விடுகிறது!பலாவைப் பிளந்து பகைசூல் ஒதுக்கி,
அழாச்சுளை உண்ணும் அறிவே! நிலாவென
பேதம்பிள சாதிவிழ பேதமை போக்குசம
நீதிகாண் நேர்மை அது!
சுரண்டலைச் சுரண்டென சுரண்டிடும் சுரண்டரும்;
சுரண்டிடச் சுரண்டிட சுரண்டலும் சுருளுமோ?
சுரண்டலைச் சுரண்டெனும் சுரண்டரைச் சுரண்டிட,
சுரண்டரும் சுருளுவர்; சுரண்டலும் சுருளுமே!
No comments:
Post a Comment