Photo: Prakash JP
ஒட்டுவானோ? உன்னுள் ஒருங்கிணைந்து பேதங்களை…
விட்டானோ? பாசம் வெளிப்பட தொட்டானோ?
தப்பிதமாய் நூலணியும் சாதி மதப்பதரை…
செப்பாதே நல்லது என்று!
கருக்குழிகளே குழந்தைகள் கருஉரு வாகும் -
வழிகள் என்று,
சிவக்குறியோடு அதை சேர்த்து சிலர் -
போற்றி வணங்க;
கருக்குழி யேவழி மானுடத்துள் காக்க
சாதிகள் என்று…
திருதளமாய் நெற்றியில் நாமம் என்றேஓதி
அதைப் பதித்து;
உருப்படாமல் சிதைத்தான் நாட்டுள் -
ஒற்று மையே!
ராம ராம ராம என்னும் நாமம் சொல்லுவான்!
நாமம் போட நாமம் போடும் ராம பக்தனே!
காம இராம யாணம் ஓதி காலம் தள்ளுவான் [ஓசியில்]
சோறு போட விவசாயி ஏர்உழ, என்னப் பண்ணுவான்?
இராம நாடு வேணுமென்று இராகம் பாடுவான்!
ஓம யாகம் என்று நெய்யை வீணில் தீயுள் ஊற்றுவான்!
சேம மோடு நாடு உயர சிந்தனை செய்யான்!
சாதி வர்ண சமய சண்டை உண்டுப் பண்ணுவான்!
அன்று பரதனுக்கு ஆதரவளித்த இராவணனும்...
நம்மண்ணுள் நுழைந்திட்ட அன்னியரை எதிர்த்தோரும்;
அன்பையே போதித்த புத்தரும், சித்தரும்தாம்
நம்முன்னோடி மூதாதையர் மானுடமே போற்று!
அறிவே! நினைவுள்கொள்; அன்றுநாடு ஆண்டநந்தன்;
இராவணன் ஏகஅலைவன்; (இ)ரண்யன் நரஅசுரர்;
புத்தன்அ சோகன், புகழ்திரு வள்ளுவர்;
சித்தர்,அம் பேத்கர்; தென்திசைப் பெரியார்! [ஈ.வெ.ரா]
இச்சகத்துள் முன்ஏர்நம்! முன்னோர்!

No comments:
Post a Comment