Thursday, 3 December 2015

பொய்யே! உனக்கு உருவம் செய்து, 'ஆண்டவன்' என்று திருட, நாமம் சூட்டி...


மெய்எனப் படுவது மெளனதாசன்கள்  
இறைவன் மட்டுமாம்!
தெய்வம் அல்லாது-ஐம் புலன்கள் தெரிந்திடினும் - 
மாயையாவு மாம்!அறி வியல்கண் டிட்ட   
பிர பஞ்சத்துள்
பொய்யாம் அனைத்தும்! புலப்படா  
கடவுள்தான் மெய்யாம்!

பொய்யே, சாற்ற  போற்றும்;  புளுகு -  
பழுதுகளே! எச்சிலும்...
அய்யன்வாய்  உள்இருந்திட்டால்,  அதுவும்   
கடவுள் லீலையாம்!
பொய்யை, போற்றி! போற்றி! எனசுரண்டு  
வதுதிறமையாம்!
அய்யன் செய்திடுகையில், அதுஅவனின்  
அந்தண தகுதியாம்!

மெய்யை,  மென்று கொல்கின்றன;   
அறிவு சிம்மங்கள்!
பெய்வது, அய்யகோ! தமிழக பெருமழையோ?  
ஆண்டவன்...
செயலென்று, கற்பிக்கும் கதைகள்! தீயன
விளைய புனைந்து;
பொய்யே! உனக்கு புதுபுது உருவகங்கள் 
 பலநிலைகளில்;
செய்து, 'ஆண்டவன்' என்றபெயரில் திருட,  
நாமங்கள் சிலசூட்டி...

தீய்... நீ, என்று உழைப்போர்  தேய அன்றாடம்  
ஏய்த்து...
வாய்மை யைவிலகி மடமையில்இதோ  
ஆண்டவன் என்று;
கைகளில் செய்திட்ட  களிமண்கல் உலோக  
பொம்மைகட்கு,
நெய்யை யாகமென நெருப்புள் வார்த்து   
மாலையிட்டுபூ

சைகள் கடவுள்கட்காம்  தைக்குத் தை  
கல்யாணம் பண்ணி;
மெய்யான  மானுடம், கன்னியாராய்;  
வயதாகி  வாடதொல்-
லைபலகோடி பலஆயிரம் தந்துறஊழ  
லைஓதுவோனின்-
பொய்கள் தெய்வமோ? புரளும் பிரபஞ்சமே-  
மாயா மெய்!
 




No comments:

Post a Comment