Photos: Keshika Sri Karthikeyan
எந்தவோர் நாமமிட்ட மனிதனுக்கோ, ஆண்டவனுக்கோ;
வினாயகன் கருவாக, பெண்ஒருவள்
பிரசவிக்கவில்லை!
எந்தவோர் விபூதி கடவுளச்சிக்கும்,
முருகன் பிறந்திடவில்லை!
இதில் யார் அணிந்திட்ட தாலி எந்தத்
தேதியில் புனிதமுற்றது?
வினாயகனோ, அய்யப்பனோ, கந்தனோ, கர்ணனோ, அவர்தம்...
அன்னையர் தாலி கட்டிட்ட நேர்வில்-
பிறந்தனரோ? [அந்தப்படிக்கு]
தாலிகட்டாமல் கடவுள்களே தோன்றி யிருக்க;
மானுட பண்புப் பரப்புக்கு வேலி எதற்கு?
தாலி புனிதத்தில் பிறந்தாற்போல் ஓதிடுதே ஊழல்வம்சம்?
பேதம்வழிச் சுரண்டல் செய்திடும் ஓதும் கூலித் தொழிலாளியே!
சாதி விலகிச் சொல்! எவன் கட்டினான் தாலி பாஞ்சாலிக்கு?
எப்போது கட்டினான்?
கால நேரம் பார்த்துத்தானே… கழுத்தில் மாட்டிக்கொண்டாள்;
பாஞ்சாலி தாலி, அன்று!
தாலி காப்பாற்றிட்டதோ பாஞ்சாலியை -
துரியோதனன் சபைமுன்?
அவள்சேலையை கரங்களால் பற்றி
இழுத்திட்டானாமே ஒருவன்!
கதைஉள்ளதே; அவளின் தாலிப் புனிதம் அச்சமயம்-
இற்றுப் போயிற்றோ?
கண்ணன் ஓடி வந்தானாமே! அவிழ அவிழ பாண்டவர் -
ஐவரும் பார்க்க...
பாஞ்சாலி சேலை வளர்ந்திட்டதாமே... கண்ணனாலே!
கண்ணா! அவன்காண நதியில் குளித்துமுடித்து
அழகுக் கரங்களை உயர்த்தி;
கெஞ்சினராமே! கன்னிப் பெண்கள்!
தாவணிகளை... கவர்ந்திட்ட வெண்ணெய்த் திருடனை
குமரிகளின் -
அன்னையர் தாலிப் புனிதங்கள்; தண்டிக்க
வில்லையேஏன்?
கண்ணனின் திருவிளையாடலாம்! அனைவரும்
துதித்திட்டன ராமே!
அந்தக் கோபியர் அன்னையருள் ஒருவரும் தாலிகட்டி;
புணர்ந்து தம்பெண்களை பிரசவிக்க
வில்லையோ?
தாலிதான் பெண்களின் கற்புநெறி கட்கு வேலியோ?
ஆசைகள் ஓர் ஆழி! ஆழிக்கு வேலி!
வேலியாய் ஓர் தாலி!
ஓதுவோனே! உன்இனமான பரப்புக்குள் -
சந்தேகவேலி எதற்கு?
எங்கே திரிசூழி வரவழை; சிவன்
உயிரோடு இருக்கையில்;
அவன்அணிவித்தத் தாலி புனிதமற்றதோ?
முக்கண்ணன் உத்தர...
தாண்டவத்தால் தாலியோடு பார்வதி எரியுண்டா ளாமேஏன்?
ஆக தாலிகட்டாமலும் குழந்தை பிறக்கும் என்னை காதல்செய்!
No comments:
Post a Comment