Photo: Prakash JP
பொரிகட லைக்கு பூசை செய்து... போற்று!
அரிகர சுதனின் அப்பா அம்மா யார்?காட்டு!
புரிய... சூதுவாதம், தெய்வம், புனிதம், பாவம் -
சரிய... சாதி, பெண்ணடிமை, சமயபேதம்,
கள்ளம்!
பெரியமழை வெள்ளம்அன்ன, பேணும்;
ஒற்றுமை உள்ளம் -
அறிவியலால் ஆய, மடஅய்யன் மதஓதல்களை...
ஊழல் என்றே சாற்றும்!
பிறந்தோமா? பிறப்புதந்த தாயின் பிழையிலா அன்பு-
புரளமனத்துள் அமிழ்தொடு அன்னைமொழியும் உண்டு;
சிறந்தோமா? சிறுகொடி செழித்து மலர்ந்து சிரித்து;
பருகு... வா! கனியும் தேனைஎன அருந்தக் கொடுத்து;
துருதுரு எனகனிந்து, தூய்மையாய் இனித்து ஒருநூறு-
வருடங்கள் மகிழ்ந்தோமா! வாழ்ந்தோமா! என்றில்லாமல்...
சே!சே! என்னடா சற்றும் தேசப் பற்றேதும் இன்றி;
சாதிவெறி நிறப்பாகுபாடு சமயப்பிரிப்பு நாகரிகமிலா-
தூ...தூ! பேதம்மதம்; பிறப்புள்ளும், தூய்மை விலகிஓதி;
நாமமிமிடும் நலம்தரா வேற்றுமை கிருமிகளாய்...
தீது செய்யவோ சனித்தோம்; இந்தியன் ஒற்றுமைக்கு-
தூது வரஓர் கடவுளும் இல்லையே! சர்வமும் சுயநலம்!
No comments:
Post a Comment