Saturday, 2 January 2016

கனவுள் மின்னும் இடிமுகில்! நனவில்... திக்குஅறி சாரலே!





  Art photo:  Mermaids Page


தோழிகளாகி இருதோல்கள்... முடிகூந்த​லை-
அவிழ்த்து, கார்முகில்கள் ஆக்கி...
உன் மேனி​யைத் தழுவிட -
தூது விடுகின்றன!

ஆழிமீன்களாய் இருவிழிகள்...  

ஆகாயம் ​நோக்கும்-
பார்​வைஅ​லைகள் த​ரைத்தழுவி... 

வருவாய்என உன்வர​வை-
ஒவ்​வோர்இரவும் எதிர்பார்க்கின்றன!

வாழிநீ என்று உன்​னை வாழ்த்திப் பாட… 

வாய்; விரியஇதழ்க​ளை ​​கெஞ்சிடும் நாக்கு-

உள்​ளே பற்க​ளைதடவி சோர்ந்து... 
துவன்றிட்டது!

வேலிஇல்லாத அழகு, நாகரது...

பாலி மொழி​அன்ன நூலில் ​கோர்த்திட்ட- 
காவிரிமுத்தாய் ​இ​டையில்... ​
தொப்புள் குழியாயிற்று!

ஏணியாய் சாய்ந்து உன்​னை- நுகரயார் 

ஆணியாய் முகம்நடுவில் அடித்திட்டது?  
நி​லைத்து ஏங்கி பகலிலும்...
மூச்சு விடுகின்றது; என் மூக்கு!

காண்வா என்காலுள்​ளே உன்சக்தி! 

உன்​னை காண மூன்றுநாள்...
அமாவா​சை நிலவாகினாள்!
விசுவ சிவ​​னோ? என்ன நினைவோ? 

[ஏங்கி தினம்]...

பின்ன கனவுள்;  பெண்நனவில்... 

என்செய்வேன்?
மின்னும் இடிமுகில்! திக்கு-
அறி சாரலே!என்...
கண்ணுள் அசைய உன்னைக் காண்பேன்!

அன்​பேநீ இருந்தால் - வாடும்
என்ஆவலுள்- முயங்கு!




 

No comments:

Post a Comment