Wednesday, 17 February 2016

காட்டிடு என்றால் கல்லை இறைவன் என்பது ஊழல்!


Dehri on Sone (Rohtas district, Bihar): SDM Court issues summons to Lord Hanuman to appear in the Court. 



அறிவியல் ஆதாரம் கடவுளுக்குக் கண்டு
பகர்வதற்கு பெற்ற தாய்அன்றி வேறுஇல்​லை!
மரணமும் பிறப்பும் இறைவனின் செயலென்று;
ஓதுதல் அதனால் ஊழல் அன்றோ?

இல்லாத ஒன்றை அடிப்படை ஏதும் இல்லாமல்...
இருந்திடுவதாய் இயம்பல் ஊழல்! - வெறும்
சொல்லாலே இறைவன் உண்டென்றும் நம்மைப்
படைத்திட்டதாக சாதிப்போற்றிப் பிழைப்பதும் ஊழல்!


காட்டிடு தெய்வத்தை என்றுஓர் பகுத்தறிவாளன் கேட்டிட
காட்டிடாது கல்லை இறைவன் என்று பறைவது ஊழல்!
காட்டெனக் கேட்டிடும் கடமையாளனை மானுடத்துள்...
கருவுள் உருஆகாத கல்பதர்போல் மாறிச்சபிப்பது ஊழல்!

எவரும்தம் உழைப்பில் உண்ணவேண்டும் அல்லாமல்;
குவலயத்துள் ஏழைகளை கடவுள் அளித்திட்டது என்று,
அவரதுஉழைப்பை திருடுவது ஊழல்! கடவுள்தான் யாவும்
எவருக்கும் தந்திட்டதுபோல் பொய்பறைவதும், ஊழல்!


 
  Photo:  Sithayan Sivakumar

No comments:

Post a Comment