Sunday, 1 May 2016

சாதி முதலைவாய் சதைசிதைவு ஆனேன்; தெய்வமும் இல்லையே!


அழகியதமிழாய், இளகிய கனிப்பலாவாய், சுளையாய்;
கழலநிலம்மேல், ஒளியாய், சொட்ட; மழைபனி...
பொழிவாய், துளித்துளி, எழிலாய், துளிரதளிர;
உலாவிட கலையாய், நழுவும் நிலவாய் இரவுள்...

உலகம் தளர்வின்றி வளம்வரும் நிலைமையில்,
பழகு... பழகபாலும் கசந்திடும்! [ஆனால்] குளுகுளு
நிலவோ இனிக்கும்; அகிலமும் உன்தோன்றலில்...
சுழன்றிட விடுபடுவேனோ என்றுபாடிட்ட பிரபஞ்சமே!

என்றேனும் உனக்கு மனைவி ஆவேன் என்று-நக...
கண்ணாலும் தீண்டாமல் நம்காதல் காத்தாய்-நீ!
என்றாலும் வேறொருவன் மனைவியாம் ஆகினேன்!                  
இன்று சாதியால் முதலைவாய் சதைசிதைவு ஆனேன்;                
என்றன் கற்புஅழிவுற! எங்கே? தெய்வமும் இல்லையே!


No comments:

Post a Comment