வறுமையின் நிறம் சிவப்பு : ஐ.நா –
ஐ.எம்.எப் நீலிக் கண்ணீர்
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 41
பணக்கார நாடுகளில் முதல் பணக்கார
நாடு அமெரிக்கா என்பதும் வறுமையில்
வாடும் குழந்தைகள் பட்டியலில் முத--
லிடத்திலும் இருப்பதும் அமெரிக்கா
தான் என்பது ஒரு முரண் நகை.
அந்த ஆய்வறிக்கை இப்படி தொடங்குகிறது “குழந்தைகளை மையமாக வைத்து அரசு அல்லது தனியாரின் சமூக நல நிறுவனங்கள், நீதிமன்றங்கள், நிர்வாக மற்றும் சட்டமியற்றும் அதிகாரிகளால் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளின் பிரதான நோக்கம் குழந்தைகளின் சிறந்த நலன்களை முதன்மையான நோக்கமாக கொண்டிருத்தல் வேண்டும்.”
அந்நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு, சமூகத்தில் மிகவும் அடித்தட்டில் உள்ள குழந்தைகள் முதல் நடுத்தர மக்கள் வரை வெவ்வேறுவிதமான விவரங்கள் குறிப்பாக குடும்ப வருமானம், கல்வி சாதனை,மகிழ்ச்சியான மற்றும் நலமான வாழ்க்கை ஆகியவற்றை வைத்து நடத்தப்பட்டதாக கூறுகிறது. ஒரு நாட்டின் நிலை குறித்து அந்நாட்டின் மக்களது வாழ்வு நிலை குறித்து அல்லாமல் இப்படி குழந்தைகள் என்று பிரிப்பது என்.ஜி.வோ பார்வை என்றாலும் அதிலேயே என்.ஜி.வோக்களின் பிதாகமகன்கள் தேறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
(மேலும்)
வானம்கிழிய; இடி! இடை...
சிரபுஞ்சி மழை!
ஏழ்மையின்...
கண்ணீர்த் துளிகள்!
நேர்மையிலா பேத(ம்)ஓதும் நீசன்--
தான் எந்நாளும்...
ஏழ்மை ஒழிந்திடாது; என்பான்!
[Those who never get justice mind;
Ever says poverty will not be removed!]
களைப்புக்கு ஏற்ப கடும்பசி;
எல்லை இல்லை!
இளைத்தும் பசிக்குஏற்ப;
கூழ் இல்லை!
உழைப்புக்குக் உண்மைக்கூலி
தரப்பெற வில்லை!
விளைவித்தும் அரிசி வீண்கனா!
விளைவிப்பவன் உண்பதில்லை!
உடைத்திட்ட தேங்காயை பொறுக்கி--
தின்றதில்;
படைத்திட்டானாம்; வாரிசுகளிடை --
பிளவுசண்டை!
கிடைத்திட்டது பசியாற சிரமமின்றி;
தினம்... உயிர்தப்ப!
அடைந்திட்ட மாட்டிறைச்சி அது--
உணவு எல்லை!
ஆலயத்துள் அர்சகராகி...
திருடிட்டதில்லை!
ஆலயஓசி ஆதாயத்தில் வரு--
மானம் இல்லை!
எக்காரணத் தால்இவன்...
ஆண்டவனின் பிள்ளை!
அக்ர காராத்தான் ஆனந்தம்;
துய்த்திட்டதில்லை!
No comments:
Post a Comment