Thursday, 11 August 2016

இறைவன் உண்டென்பதாய் மானுடத்தை ஏமாற்றி...


Public
Aug 10, 17:04
Photo

சாதி​ சோதி ஆகிற்று! ​சோதி [ஆரியனுக்கு]​ 
வெளிச்சம் ஆகிட்டது! அந்தப்படிக்கு-
தனிப்​பெரும் ​சோதி என்பது தனிப்​பெரும்...
சாதி என்கின்ற உள்அர்த்தத்​தை--
ம​றைவாக கொண்டுள்ளது! 

கருத்தரிப்பு, வளைகாப்பு, காதணி...
அணிவிப்பு; 
பூப்பு அடைய நீராட்டு அன்ன...
பெண் அடிமைக்கு!
திருமணநாள் குறிப்பு... திருமணம்!
ஆரத்தி விழா!
அருந்ததி பார்த்திட அம்மி மித்திட, 
சாந்தி கொண்டாட்டம்!

ஒவ்வோர் ஆண்டும், பிறந்தநாள்...
ஆர்ப்பாட்டம்; 
மானுடம், மறைவுற்ற நாளில்...
நினைவு நாள்!
இறந்திட்ட மூன்றாம்நாளில், சடங்காம்!
கருமாதி பெயரில்...
கறிநாள் என்று மானுடத்தை--

தெருச்சுற்றும் பிசாசாக்கி; பரிகாரம், 
பேய்பில்லி,
சூனியம் வைப்பு, எடுப்பு என்று...
கற்பனைக்கு...
பாவ விமோசனம் பூசைகள்;
இறைவன்உண்டென்பதாய் மானுடத்தை-- ஏமாற்றி... உருஅழிந்து!

எப்போதோ செத்துஉரு அழிந்தவனை நினைவுப்படுத்தி,
பேததீய சக்திகளை ஒன்றினைக்கும் 
வேற்றுமை தீபவிழா அன்ன...
ஒவ்வோர் ஆண்டும் ஆகபல நிலைகளில்;
தேதிகளில் விடா...
கொண்டாட்டம் யாவும் பேததிருடரின்...
சுரண்டல் சூழ்ச்சி!

சுரண்டலைச் சுரண்டென சுரண்டிடும் 
சுரண்டரும்
சுரண்டிடச் சுரண்டிட சுரண்டலும் 
சுருளுமோ? 
சுரண்டலைச் சுரண்டென்று சுரண்ட​ரைச் 
சுரண்டிட
சுரண்டுவோர் சுருளுவர் சுரண்டலும் 
சுருளுமே!

No comments:

Post a Comment